குடியாத்தத்தில் அஸ்ஸாம் அரச பயங்கரவாதத்தை கண்டித்து பதாகை ஏந்தி மஜக ஆர்ப்பாட்டம்!

அஸ்ஸாம் மாநிலம் சிபாஜ்ஹார் என்ற இடத்தில் 30 ஆண்டுகளாக குடியிருந்த சுமார் 500 குடும்பத்தினருக்கும் மேற்பட்ட மக்களை விரட்ட அரச பயங்கரவாதத்தை ஏவிய பாஜக மாநில அரசை கண்டித்து வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகர மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் பதாகை ஏந்திய ஆர்ப்பாட்டம் நகர செயலாளர் S.அனீஸ் தலைமையில் நடைப்பெற்றது.

இந்த ஆர்பாட்டத்தில் அஸ்ஸாம் மாநில பாஜக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பபட்டன இதில் மஜக நகர நிர்வாகிள் சாதிக், உசேன், பிலால், அலீம், கபீர், சுஹேல், முபாரக் ஜெயினுலாப்தீன் அகியோர் கலந்து கொண்டனர்.

தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#வேலூர்_மாவட்டம்
01-10-2021