நாளை நடைபெற உள்ள 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் உருது பாடத்திட்டத்தில் உருது மொழியில் வினாத்தாள் வழங்கப்பட மாட்டாது என்று பள்ளி கல்வி துறை மறுத்திருந்தன்.
இந்நிலையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில செயலாளர் N.A.தையமிய்யா தலைமையில் மஜக மாநில துணை செயலாளர் பஷீர் அஹமது, தென் சென்னை மாவட்ட செயலாளர் கபீர் மற்றும் மாணவர் இந்தியா மாநில செயலாளர் அஸார் தீன் உள்பட மாநில நிர்வாகிகள் இன்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளை சந்தித்து உருது மொழியில் வினா தாள்கள் வழங்கப்பட
வேண்டும் என்று வலியுறுத்தினர்.
உடனே அதிகாரிகள் அந்தந்த மாவட்ட அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு பேசினர். அதன் விளைவாக தமிழகத்தில் கீழ் வரும் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
வளத்தூர்(1), பள்ளிகொண்டான்(1),
குடியாத்தம்(2), திருப்பத்தூர்(1),
ஓசூர்,கிருஷ்ணகிரி(9),
விழுப்புரம்(1) ஆகிய அரசு பள்ளிகள் உள்பட மொத்தம் 905 மாணவர்கள் பயன்பெறும் வகையில் இன்று இரவு அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
துரிதமாக செயல்பட்டு கோரிக்கையை ஏற்று செயல்படுத்தி தந்த பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு மாணவர் இந்தியா மற்றும் மஜக சார்பில் நன்றிகள் பல…
தகவல் : மாணவர் இந்தியா ஊடக பிரிவு,
தலைமையகம் சென்னை.
07.03.2017