நாகை மாவட்டம் திருப்பூண்டி கிளை சார்பாக மஜக கொடியேற்றம் நிகழ்வு…! மாநில செயலாளர் பங்கேற்பு..!

மனிதநேய ஜனநாயக கட்சி #MJK நாகை மாவட்டம், கீழையூர் ஒன்றியம், திருப்பூண்டி கிளை சார்பாக கொடியேற்றம் நிகழ்ச்சி நான்கு இடங்களில் நடைப்பெற்றது. இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் J.ஷாகுல் ஹமீது முன்னிலை வகிக்க, மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜ்தீன் அவர்கள் கலந்து கொண்டு கொடியினை ஏற்றி வைத்தார்.

சிறப்பு அழைப்பாளராக கத்தார் மண்டல பொருப்பாளர் ஃபார்மனுல்லாஹ் , மாவட்ட பொருளாலர் சதக்கத்துல்லாஹ், நாகை ஒன்றிய துணை செயலாளர் சதாம் மற்றும் நாகூர் நகர பொருலாளர் ஷாகுல் ஹமீது அவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கம் #MJTS அறிமுகம் செய்து தொழிற்சங்கம் கிளை செயலாளர் அவர்கள் முன்னிலையில் புதியவர்கள் உறுப்பினராக இணைத்து கொண்டனர்.

இதில் திருப்பூண்டி கிளை நிர்வாகிகள் மற்றும் செயல் வீரர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#நாகை_மாவட்டம்
26.09.2021