மனிதநேய ஜனநாயக கட்சியின் இளைஞர் அணி முன்னெடுப்பில் மாவீரன் கான்சாகிப் என்ற நூல் வெளியீட்டு நிகழ்வு தஞ்சாவூரில் நடைபெற்றது. ஐந்து மணி நேரத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் நகரின் பல்வேறு சமூகங்களையும், அரசியல் கட்சிகளையும் சேர்ந்த பிரமுகர்களும், சமூக ஆர்வலர்களும் பங்கேற்றது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை தந்தது. நேற்று மாவீரர் மருத நாயகம் என்கிற கான் சாஹிப் அவர்கள் தூக்கிலிப்பட்ட நினைவு தினத்தை முன்னிட்டு, அவர்களின் வாழ்க்கை வரலாற்றை "மாவீரர் கான் சாஹிப்" என்ற நூலை மறு அறிமுகம் செய்திடும் நிகழ்ச்சி தஞ்சை கிரீன் சிட்டி ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்காக சுதந்திரப் போராளிகள் நினைவேந்தல் குழுவும் இணைந்து பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. ஒரு விடுதலை தலைவரின் தியாகத்தை போற்றிட அரசியல், கொள்கை பேதமின்றி அனைவரும் வருகை தந்தது பலராலும் பாராட்டப்பட்டது. விடுதலைப் போராட்ட தலைவர் மருதநாயகம் குறித்து தமிழில் வெளிவந்த முதல் ஆதாரப்பூர்வ நூல் இது என்பதால் எதிர் பார்ப்பும் கூடியிருந்தது. கவிக்கோ. அப்துல் ரஹ்மானின் தந்தை மஹதி அவர்கள் 12.11.1961 ஆம் ஆண்டு எழுதிய நூலை நேஷ்னல் பப்ளிஷர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. மஹதி அவர்கள் தந்தை பெரியார், இடதுசாரி தலைவர்
மஜக தகவல் தொழில்நுட்ப அணி – MJK IT-WING
மஜக தகவல் தொழில்நுட்ப அணி – MJK IT-WING
கத்தார் MKP சார்பில் இணையவழியில் நன்றி அறிவிப்பு நிகழ்ச்சி..!
அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ் ஹாரூன் ரசீது... மஜக தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா நாசர் ஆகியோர் பங்கேற்று சிறப்புரை..!! மனிதநேய ஜனநாயக கட்சியின் அயல்நாட்டு பிரிவான மனிதநேய கலாச்சார பேரவை கத்தார் மண்டலம் சார்பாக புலம்பெயர் தமிழர் வாரியம் அமைக்கும் அறிவிப்பை வெளியிட்ட தமிழ்நாடு முதல்வருக்கு இணைய வழி "நன்றி அறிவிப்பு நிகழ்ச்சி" மற்றும் வாரியத்தின் பயன்பாடுகள் குறித்து விளக்கும் கருத்தரங்கம் காணொளி மூலம் நேற்று நடைபெற்றது. நிகழ்வில் மண்டல செயலாளர் ஆயங்குடி முஹம்மது யாசீன் தலைமை தாங்கினார், தலைமை செயற்குழு உறுப்பினர் உத்தமபாளையம் உவைஸ், மண்டல பொருளாளர் நிசார் அஹமது மற்றும் மண்டல துணைச் செயலாளர்கள் சிதம்பரம் நூர், பரங்கிப்பேட்டை ரஜ்ஜாக், பாரூக், திருச்சி நசீர் பாஷா, மேலப்பாளையம் பத்தாஹ், தகவல் தொழில்நுட்ப அணி மண்டல செயலாளர் ஜூபைர், தகவல் தொழில்நுட்ப அணி மண்டல துணைச் செயலாளர் கருப்பூர் உபைஸ் முன்னிலை வகித்தனர். தலைமை செயற்குழு உறுப்பினர் கீழக்கரை ஹுசைன் தொகுப்புரை வழங்கினார், கத்தார் மண்டல பொருளாளர் நிசார் அஹமது வரவேற்புரை நிகழ்த்த நிகழ்ச்சி ஆரம்பமானது. சிறப்பு அழைப்பாளர்களாக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை
மருதநாயத்தின் தியாகத்தை போற்ற மணிமண்டபம் கட்ட வேண்டும்! மு.தமிமுன் அன்சாரி…
#இவர்களின்_தியாகத்தை_ஆவணப்படுத்த_வேண்டும்! #திருமுருகன்_காந்தி... மனிதநேய ஜனநாயக கட்சியின் இளைஞர் அணி சார்பில் கான் சாஹிப் @ மருதநாயகம் அவர்களின் தியாகத்தை போற்றும் வகையில் அவர் தூக்கிலிடப்பட்ட தினமான அக்டோபர் 15 அன்று காணொளி வழியே கருத்தரங்கம் இளைஞரணி மாநில செயலாளர் அஸாருதீன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் பேசிய மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர்.திருமுருகன் காந்தி அவர்கள் மருதநாயகத்தைப் போன்ற எண்ணற்ற தலைவர்களின் தியாகத்தை ஆவணப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி பேசினார். மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் மருதநாயகத்தின் தியாக உணர்வை விரிவுரையாக எடுத்துரைத்து பேசினார். மேலும் மருதநாயத்தின் தியாகத்தை போற்றும் விதமாக மணிமண்டபம் கட்ட வேண்டும் என்று பேசினார். நிகழ்வில் மாநில துணைச் செயலாளர்கள் பல்லாவரம் ஷஃபி, பாபு ஷாஹின்ஷா, அப்சர் சையத், நெய்வேலி இப்ராஹிம், நாகை முபாரக், IKP மாநில செயலாளர் லேனா இசாக், மாணவர் இந்தியா மாநில பொருளாளர் பஷீர் அஹமது உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மஜக சொந்தங்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #தலைமையகம் 15.10.2021
வசீம் அக்ரம் வீட்டில் நலம் விசாரிப்பு… மஜக அவைத்தலைவர் நாசர் உமரி மற்றும் நிர்வாகிகள் வருகை!
கடந்த மாதம் மஜக பிரமுகர் வசீம் அக்ரம் அவர்கள் வாணியம்பாடியில் கஞ்சா வினியோக கூலிப்படையால் கொல்லப்பட்டது தமிழகமெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நடைபெற்று இன்றோடு ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில், மஜக அவைத் தலைவர் மவ்லவி எஸ்.எஸ்.நாசர் உமரீ அவர்கள் அவரது இல்லத்திற்கு சென்று குடும்பத்தினரிடம் நலம் விசாரித்தார். அவருடன் மஜக மாநில துணைச் செயலாளரும், அம்மாவட்ட மேலிட பொறுப்பாளருமான SG.அப்சர் சையத், மாவட்ட செயலாளர் ஜஹிருல் ஜமா ஆகியோரும் உடன் சென்றனர். தற்போது சம்பவம் தொடர்பான காவல்துறை செயல்பாடுகள், வழக்கு நிலை ஆகியவை குறித்தும் பேசப்பட்டது. மஜக தலைமை இவற்றில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதையும், குடும்ப நல நிதி சேகரிப்பிலும் அக்கறை எடுத்து வருவதையும் அவைத் தலைவர் அவர்கள், வசீம் குடும்பத்தினரிடம் தெரிவித்தார். இச்சந்திப்பின் போது வசீமின் சகோதரர் முஹம்மத் பஹீம், வாணியம்பாடி நகர செயலாளர் நயீம், மன்சுர் அஹ்மத் மற்றும் வசீமின் உறவினர்கள் ஆகியோரும் உடன் இருந்தனர். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #திருப்பத்தூர்_மாவட்டம் 09.10.2021
போதை பொருட்களிலிருந்து பிள்ளைகளை பாதுகாப்பதே அவசர தேவையாகும்! தஞ்சை நிகழ்வில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பேச்சு!
கடந்த அக்டோபர் 7 அன்று தஞ்சாவூரில், பெண்கள் உதவும் கரங்கள் அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கீழவாசல் மஹ்தியா பெண்கள் மதரஸா வளாகத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி Ex.MLA அவர்கள் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார். அவருடன் துணைப் பொதுச் செயலாளர் மதுக்கூர். ராவுத்தர்ஷா. மாநில துணைச் செயலாளர் வல்லம். அகமது கபீர் ஆகியோரும் பங்கேற்றனர். இதில் பங்கேற்று திருக்குர்ஆன் போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கு பரிசுகளும் மற்றும் அனைத்து சமூக ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் பொதுச் செயலளார் வழங்கினார். இந்நிகழ்வை பெண்கள் உதவும் கரங்கள் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் அப்துல்லாஹ், தலைவர் N. நாஸ்னி பேகம், செயலாளர் ஹாஜிரா பீவி, பொருளாளர் ஜமீலா பேகம் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடுகள் செய்திருந்தனர். இதில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்று பேசிய உரையின் சுருக்கம் பின்வருமாறு... பெண்கள் சுதந்திரமாக தொழில் செய்யவும், கல்வி கற்கவும், சேவையாற்றவும் இஸ்லாமிய மார்க்கம் ஊக்குவிக்கிறது. அவர்கள் ஆணாதிக்கத்தாலும், பாலியல் சீண்டல்களாலும் பாதிக்கப்படாமல் இப்பணிகளை மேற்கொள்ள அனுமதிக்கிறது. இந்த வரையறையை நல்லெண்ணத்துடன் ; நடுநிலையாக புரிந்துக்