மனிதநேய ஜனநாயக கட்சியின் இளைஞர் அணி முன்னெடுப்பில் மாவீரன் கான்சாகிப் என்ற நூல் வெளியீட்டு நிகழ்வு தஞ்சாவூரில் நடைபெற்றது.
ஐந்து மணி நேரத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் நகரின் பல்வேறு சமூகங்களையும், அரசியல் கட்சிகளையும் சேர்ந்த பிரமுகர்களும், சமூக ஆர்வலர்களும் பங்கேற்றது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை தந்தது.
நேற்று மாவீரர் மருத நாயகம் என்கிற கான் சாஹிப் அவர்கள் தூக்கிலிப்பட்ட நினைவு தினத்தை முன்னிட்டு, அவர்களின் வாழ்க்கை வரலாற்றை “மாவீரர் கான் சாஹிப்” என்ற நூலை மறு அறிமுகம் செய்திடும் நிகழ்ச்சி தஞ்சை கிரீன் சிட்டி ஹோட்டலில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்காக சுதந்திரப் போராளிகள் நினைவேந்தல் குழுவும் இணைந்து பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
ஒரு விடுதலை தலைவரின் தியாகத்தை போற்றிட அரசியல், கொள்கை பேதமின்றி அனைவரும் வருகை தந்தது பலராலும் பாராட்டப்பட்டது.
விடுதலைப் போராட்ட தலைவர் மருதநாயகம் குறித்து தமிழில் வெளிவந்த முதல் ஆதாரப்பூர்வ நூல் இது என்பதால் எதிர் பார்ப்பும் கூடியிருந்தது.
கவிக்கோ. அப்துல் ரஹ்மானின் தந்தை மஹதி அவர்கள் 12.11.1961 ஆம் ஆண்டு எழுதிய நூலை நேஷ்னல் பப்ளிஷர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
மஹதி அவர்கள் தந்தை பெரியார், இடதுசாரி தலைவர் ப.ஜீவானந்தம், கவிஞர் பாரதிதாசன் ஆகியோரோடு பழகியவர்.
சிறந்த எழுத்தாளர், சமூக செயல்பாட்டாளர் என இயங்கியவர்.
அவர் எழுதிய இந்நூலின் இரண்டாம் பதிப்பைத் தான் இந்நிகழ்வில் அறிமுகம் செய்து பகிரப்பட்டது.
மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணை செயலாளர் வல்லம் அஹ்மது கபீர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அகில உலக தமிழ் பேரவை ராம சந்திர சேகரன் வரவேற்புரையுடன், மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்று நூலாய்வு செய்து பேசினார்.
முன்னதாக மாநில துணை பொதுச்செயலாளர் ராவுத்தர்ஷா அவர்கள், மாவீரர் கான் சாஹிப் பற்றி பிரபல பாடகர் சீனி முகம்மது பாடிய பாடல் ஒலிப்பேழையை தொடங்கி வைத்தார். அதை அனைவரும் கேட்டு மகிழ்ந்தனர்.
பிறகு இந்நூலை பொதுச் செயலாளர் அவர்கள் சமூக ஆர்வலர் எஸ்.என்.எம். இஸ்மாயில், கிரித்தவ அறிஞர் ஃபாஸ்டர் பிரபு, அகில இந்திய முக்குலத்தோர் பாசறை நிர்வாகி வெற்றி ஆகியோருக்கு வழங்கினார்.
தொடர்ந்து காவல் துணை கண்காணிப்பாளர் (ஓய்வு) அல்மாஸ் அலி மற்றும் திரு. முனியசாமி, ஆகியோருக்கும், பாஜக பிரமுகர் முரளி, சமூக ஆர்வலர்கள் முஹம்மது அபுபக்கர், சலீம், ஜெய் சங்கர், மணி, முத்து, முஹம்மது ஃபாரூக், திரு. ரஹ்மான், திரு. சுலைமான், IUML மாவட்ட செயலாளர் SM.ஜெய்னுலாப்தீன் ஆகியோருக்கும் வழங்கினார்.
பலரும் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் கையெழுத்திட்டு கொடுத்த நூலை ஆவலுடன் பெற்று சென்றனர்.
மேலும் இந்நிகழ்வில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில வர்த்தகர் அணி செயளாலர் யூசுப் ராஜா, மாநில விவசாய அணி செயலாளர் அப்துல் சலாம், தஞ்சை மாநகர மாவட்ட செயலாளர் அப்துல் ஜப்பார், மாவட்ட பொருளாளர் அப்துல்லாஹ், தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் சேக் முஹம்மது அப்துல்லாஹ், மருத்துவ சேவை அணி செயலாளர் புரோஸ்கான், கிரீன் சிட்டி நிர்வாகத்தை சேர்ந்த நவீன், மாநகர பொருளாளர் முஹம்மது காமில், மாணவர் இந்தியாவை சேர்ந்த லால்பேட்டை முஷ்ரப், மஜக முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் வீர சோழன் மெய்தீன் மற்றும் கட்சியின் நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.
இறுதியாக மஜக தஞ்சை மாநகர் மாவட்ட செயலாளர் ஜப்பார் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவுபெற்றது.
………..
நூல் கிடைக்குமிடம்..
நேஷனல் பப்ளிஷர்ஸ்,
2, வடக்கு உஸ்மான் சாலை,
டி.நகர், சென்னை – 17
தொலைபேசி :
044- 2834 33 85,
அலைப்பேசி,
9444 04 77 86
விலை: ரூபாய் 70
……………
தகவல் ;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#தஞ்சை_மாநகர்_மாவட்டம்,
15.10.2021