வசீம் அக்ரம் வீட்டில் நலம் விசாரிப்பு… மஜக அவைத்தலைவர் நாசர் உமரி மற்றும் நிர்வாகிகள் வருகை!

கடந்த மாதம் மஜக பிரமுகர் வசீம் அக்ரம் அவர்கள் வாணியம்பாடியில் கஞ்சா வினியோக கூலிப்படையால் கொல்லப்பட்டது தமிழகமெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் நடைபெற்று இன்றோடு ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில், மஜக அவைத் தலைவர் மவ்லவி எஸ்.எஸ்.நாசர் உமரீ அவர்கள் அவரது இல்லத்திற்கு சென்று குடும்பத்தினரிடம் நலம் விசாரித்தார்.

அவருடன் மஜக மாநில துணைச் செயலாளரும், அம்மாவட்ட மேலிட பொறுப்பாளருமான SG.அப்சர் சையத், மாவட்ட செயலாளர் ஜஹிருல் ஜமா ஆகியோரும் உடன் சென்றனர்.

தற்போது சம்பவம் தொடர்பான காவல்துறை செயல்பாடுகள், வழக்கு நிலை ஆகியவை குறித்தும் பேசப்பட்டது.

மஜக தலைமை இவற்றில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதையும், குடும்ப நல நிதி சேகரிப்பிலும் அக்கறை எடுத்து வருவதையும் அவைத் தலைவர் அவர்கள், வசீம் குடும்பத்தினரிடம் தெரிவித்தார்.

இச்சந்திப்பின் போது வசீமின் சகோதரர் முஹம்மத் பஹீம், வாணியம்பாடி நகர செயலாளர் நயீம், மன்சுர் அஹ்மத் மற்றும் வசீமின் உறவினர்கள் ஆகியோரும் உடன் இருந்தனர்.

தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#திருப்பத்தூர்_மாவட்டம்
09.10.2021