காயல்பட்டினத்தில் பெய்த கன மழையால் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது அதை மோட்டார் மூலம் வெளியேற்றும் பணியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பேரிடர் மீட்பு குழுவினர் மாநில துணைச் செயலாளர் சாகுல் ஹமீது, அவர்கள் தலைமையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று அக்பர்ஷா தெரு பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். துணைப் பொதுச் செயலாளர் தைமிய்யா, அவர்கள் பணிகளை பார்வையிட்டு மழை வெள்ள மீட்பு பணிகள் குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #தூத்துக்குடி_மாவட்டம் 28-11-2021
மஜக தகவல் தொழில்நுட்ப அணி – MJK IT-WING
மஜக தகவல் தொழில்நுட்ப அணி – MJK IT-WING
பண்ருட்டியில் கனமழை காரணமாக வீடு இடிந்து பெண்மணி மரணம்! நிவாரண தொகை பெற்றுக் கொடுத்த மஜகவினர்!
கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகரத்தில் நேற்று பெய்த கன மழையில் சாமியார் தர்கா பகுதியில் வீடு ஒன்று இடிந்து விழுந்து ஜெய்புன், என்ற பெண்மணி மரணமடைந்தார். அதைத் தொடர்ந்து மனிதநேய ஜனநாயக கட்சியின் கடலூர் வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் பன்ருட்டி யாசின், அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் வட்டாட்சியர் அவர்களை நேரில் சந்தித்து இறந்த பெண்மணியின் குடும்பத்தினருக்கு நிவாரண தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதைத்தொடர்ந்து மஜக வின் கடும் முயற்சியால் வட்டாட்சியர் அவர்கள் அந்த குடும்பத்திற்கு 4 லட்சம் ரூபாய் நிவாரண தொகை அரசு சார்பில் அளிப்பதாக அறிவித்தார். இந்நிகழ்வில் பண்ருட்டி நகர செயலாளர் நூர் முகம்மது, மற்றும் நகர கிளை நிர்வாகிகள் உடனிருந்தனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #கடலூர்_வடக்கு_மாவட்டம் 26.11.2021
கொரோனா பெருந்தொற்றில் மக்கள் நல சேவையாற்றிய கோவை மஜகவிற்கு விருது! கோயம்புத்தூர் எகனாமிக் சேம்பர் டிரஸ்ட் சார்பாக வழங்கப்பட்டது!
கொரோனா பெருந்தொற்று காலத்தில் கோவை மாநகர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் உணவு வழங்குதல், வாழ்வாதார உதவிகள் வழங்குதல், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவம் சார்ந்த உதவிகள், கிருமி நாசினி தெளித்தல், ஆக்சிஜன் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் , உள்ளிட்ட மக்கள் நல சேவை பணிகள் தொடர்ந்து செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் கோயம்புத்தூர் எகனாமிக் சேம்பர் டிரஸ்ட் சார்பில் மஜக வின் மக்கள் நல சேவைகளை பாராட்டி டிரஸ்டின் நிர்வாகிகள் இன்று மாவட்ட அலுவலகத்தில் நிர்வாகிகளை சந்தித்து விருதை வழங்கினர். விருதை மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், அவர்கள் தலைமையிலான நிர்வாகிகள் பெற்றுக் கொண்டனர். இந்நிகழ்வில் மருத்துவ சேவை அணி மாநில துணை செயலாளர் சையத் இப்ராஹிம், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணைச் செயலாளர் ATR. பதுருதீன், வணிகர் சங்க மாவட்ட பொறுப்பாளர் ஹாருண், மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர் .. தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #கோவை_மாநகர்_மாவட்டம் 27.11.2021
எஸ்டிபிஐ கட்சியின் தேசிய தலைவராக ஃபைஜி தேர்வு.! மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது வாழ்த்து.!!
எஸ்டிபிஐ கட்சியின் தேசிய தலைவராக ஃபைஜி அவர்கள் புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்டார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுடன் அனைத்து இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சமுதாய பிரமுகர்கள் சந்திப்பு மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னை இராயபுரத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் கலந்துகொண்டு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து, நடப்பு அரசியல் நிகழ்வுகள் குறித்தும், பாசிசத்தை எதிர்பதில் அனைவரும் ஓரணியில் இணைந்திருப்பது குறித்தான அவசியத்தை எடுத்துரைத்தார். அவருடன் துணைப் பொதுச் செயலாளர் என்.ஏ. தைமிய்யா, மருத்துவ சேவை அணி மாநில செயலாளர் அப்துல் ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #வடசென்னை_மாவட்டம் 24.11.2021
சிறைவாசிகள் விடுதலை குறித்து கோரிக்கை! கோவையில் தமிழக முதல்வருடன் மஜக துணை பொதுச்செயலாளர் சுல்தான் அமீர் சந்திப்பு!
பல்வேறு நிகழ்ச்சிக்காக கோவை வருகை புரிந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அவர்களை கோவை மாவட்ட அனைத்து கூட்டமைப்பு ஒருங்கி ணைப்பாளரும் மனிதநேய ஜனநாயக கட்சியின் துணைப் பொதுச் செயலாளருமான சுல்தான் அமீர், மற்றும் ஒருங்கி ணைப்பாளர்கள் இனாயத்துல்லாஹ் ஹாஜியார், சகோதரர் சாதிக் அலி, ஆகியோர் சந்தித்தனர். இச்சந்திப்பில் அண்ணா பிறந்தநாளையொட்டி தமிழக அரசு அறிவித்துள்ள 700 சிறைவாசிகள் விடுதலை ஆணையில் இஸ்லாமிய சிறைவாசிகள் இடம்பெறாதது சிறுபான்மை மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது ஆகவே தாங்கள் இவ்விஷயத்தில் நியாயமான முறையில் நடவடிக்கை எடுத்து சிறைவாசிகள் விடுதலை விஷயத்தில் ஜாதி, மத, வழக்கு, பேதமில்லாமல் அனைவரையும் விடுதலை செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும் இது தொடர்பான ஆவணங்களையும் தமிழக முதல்வரிடம் வழங்கினனர். கோரிக்கைகளை விரிவாக கேட்ட தமிழக முதல்வர் அவர்கள் இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார். இச்சந்திப்பில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மற்றும் அனைத்து கட்சி, இயக்கங்களின், நிர்வாக பிரதிநிதிகள் உடனிருந்தனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #கோவை_மாநகர்_மாவட்டம் 23.11.2021