பண்ருட்டியில் கனமழை காரணமாக வீடு இடிந்து பெண்மணி மரணம்! நிவாரண தொகை பெற்றுக் கொடுத்த மஜகவினர்!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகரத்தில் நேற்று பெய்த கன மழையில் சாமியார் தர்கா பகுதியில் வீடு ஒன்று இடிந்து விழுந்து ஜெய்புன், என்ற பெண்மணி மரணமடைந்தார்.

அதைத் தொடர்ந்து மனிதநேய ஜனநாயக கட்சியின் கடலூர் வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் பன்ருட்டி யாசின், அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் வட்டாட்சியர் அவர்களை நேரில் சந்தித்து இறந்த பெண்மணியின் குடும்பத்தினருக்கு நிவாரண தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

அதைத்தொடர்ந்து மஜக வின் கடும் முயற்சியால் வட்டாட்சியர் அவர்கள் அந்த குடும்பத்திற்கு 4 லட்சம் ரூபாய் நிவாரண தொகை அரசு சார்பில் அளிப்பதாக அறிவித்தார்.

இந்நிகழ்வில் பண்ருட்டி நகர செயலாளர் நூர் முகம்மது, மற்றும் நகர கிளை நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#கடலூர்_வடக்கு_மாவட்டம்
26.11.2021