கொரோனா பெருந்தொற்று காலத்தில் கோவை மாநகர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் உணவு வழங்குதல், வாழ்வாதார உதவிகள் வழங்குதல், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவம் சார்ந்த உதவிகள், கிருமி நாசினி தெளித்தல், ஆக்சிஜன் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் , உள்ளிட்ட மக்கள் நல சேவை பணிகள் தொடர்ந்து செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் கோயம்புத்தூர் எகனாமிக் சேம்பர் டிரஸ்ட் சார்பில் மஜக வின் மக்கள் நல சேவைகளை பாராட்டி டிரஸ்டின் நிர்வாகிகள் இன்று மாவட்ட அலுவலகத்தில் நிர்வாகிகளை சந்தித்து விருதை வழங்கினர்.
விருதை மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், அவர்கள் தலைமையிலான நிர்வாகிகள் பெற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்வில் மருத்துவ சேவை அணி மாநில துணை செயலாளர் சையத் இப்ராஹிம், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணைச் செயலாளர் ATR. பதுருதீன், வணிகர் சங்க மாவட்ட பொறுப்பாளர் ஹாருண், மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர் ..
தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#கோவை_மாநகர்_மாவட்டம்
27.11.2021