தேனியில் விவசாயிகளுக்கு ஆதரவாக சாலை மறியல் போராட்டம்.! மஜகவினர் பங்கேற்பு!

ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று நாடு முழுவதும் பாரத் பந்த் அறிவிக்கப்பட்டு, விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

அவர்களுக்கு ஆதரவாக மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக தமிழகம் முழுவதும் இன்று பரவலாக ஆர்ப்பாட்டங்கள் மற்றும் மறியல்கள் நடைபெற்று வருகின்றன.

அதன் ஒரு நிகழ்வாக மஜக தேனிமாவட்டம் சார்பாக கம்பத்தில அனைத்து கட்சிகள் இணைந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் கம்பம் கரீம் அவர்கள் தலைமையில் மஜகவினர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கம்பம் நகர செயலாளர் கலில் ரஹ்மான், மாவட்ட துணைச்செயலாளர் அம்ஜத் மீரான், மாவடட் தொழிற்ச்சங்க செயலாளர் தாஹா, நகர பொருளாளர் காதர் மைதீன், துணைச்செயலாளர் ஷாஜஹான், கம்பம் நகர மருத்துவ சேவை அணி செயலாளர் ஷாஜஹான், நகர இளைஞரணி செயலாளர் சேக் மாணவர் இந்தியா நிர்வாகி அசரப் ஒலி மற்றம் சுல்தான் உள்ளிட்ட மாவட்ட, நகர, கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை பதிவுசெய்தனர்.

#IStandWithFarmers
#MjkStandWithFarmers

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#தேனி_மாவட்டம்
27.09.2021