எஸ்டிபிஐ கட்சியின் தேசிய தலைவராக ஃபைஜி அவர்கள் புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்டார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுடன் அனைத்து இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சமுதாய பிரமுகர்கள் சந்திப்பு மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னை இராயபுரத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் கலந்துகொண்டு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து, நடப்பு அரசியல் நிகழ்வுகள் குறித்தும், பாசிசத்தை எதிர்பதில் அனைவரும் ஓரணியில் இணைந்திருப்பது குறித்தான அவசியத்தை எடுத்துரைத்தார்.
அவருடன் துணைப் பொதுச் செயலாளர் என்.ஏ. தைமிய்யா, மருத்துவ சேவை அணி மாநில செயலாளர் அப்துல் ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#வடசென்னை_மாவட்டம்
24.11.2021