மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக ஜனவரி 8 அன்று "சாதி, மத வழக்கு பேதமின்றி 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி" கோவை மத்திய சிறைச்சாலை முற்றுகை போராட்டத்தை அறிவித்துள்ளது. போராட்டத்தின் ஆயத்த பணிகள் குறித்து ஆலோசிக்க விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் J.சௌக்கத் அலி, அவர்கள் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வின் சிறப்பு அழைப்பாளராக மாநில துணைச்செயலாளரும், மாவட்ட மேலிட பொறுப்பாளருமான நெய்வேலி இப்ராஹிம் கலந்துகொண்டார். கூட்டத்தில் மாவட்டத்தின் சார்பாக முன்னெடுக்க வேண்டிய போராட்ட பரப்புரை பணிகள் குறித்தும், முற்றுகை போராட்டத்திற்கு திரளான மக்களை அழைத்து செல்வது எனவும் முடிவெடுக்கப்பட்டது. இதில் மாவட்ட துணைச்செயலாளர் அபுதாகிர், மாவட்ட இளைஞரணி செயலாளர் அன்சாரி, இளைஞரணி துணை செயலாளர்கள் மன்சூர் அகமது, அசோக், நகர செயலாளர் பாட்ஷா உள்பட மாவட்ட, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #கோவையில்_திரள்வோம் #நீதியை_வெல்வோம் #ReleaseLongTermPrisoners தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #விழுப்புரம்_தெற்கு_மாவட்டம்
மஜக தகவல் தொழில்நுட்ப அணி – MJK IT-WING
மஜக தகவல் தொழில்நுட்ப அணி – MJK IT-WING
ஜனவரி08 கோவை சிறை முற்றுகை போராட்டம்! மயிலாடுதுறை மாவட்ட மஜக ஆயத்த ஆலோசனை கூட்டம்!
மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக ஜனவரி 8 அன்று "சாதி, மத வழக்கு பேதமின்றி 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி" கோவை மத்திய சிறைச்சாலை முற்றுகை போராட்டத்தை அறிவித்துள்ளது. போராட்டத்தின் ஆயத்த பணிகள் குறித்து ஆலோசிக்க மயிலாடுதுறை மாவட்ட ஆலோசனை கூட்டம் நீடூர் நெய்வாசல் நகரம் அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் என்.எம்.மாலிக் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்டத்தின் சார்பாக முன்னெடுக்க வேண்டிய போராட்ட பரப்புரை பணிகள் குறித்தும், முற்றுகை போராட்டத்திற்கு திரளான மக்களை அழைத்து செல்வது எனவும் முடிவெடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் ஆக்கூர் ஷாஜகான், மாவட்ட துணைச் செயலாளர்கள் அஜ்மல் உசேன், மிஸ்பாஹூதீன், மாவட்ட மருத்துவ அணி செயலாளர் நூருல் அமீன், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் நீடூர் குர்ஷித் கான், மயிலாடுதுறை ஒன்றிய செயலாளர் நீடூர் ஜெப்ருதீன் மற்றும் நிர்வாகிகள் இம்ரான்,ரியாஷீதீன்,மாலிக், சல்மான், சர்புதீன்,பஹத்,அசார்,நிஜாமுதீன் ஆகியோர் உடன் இருந்தனர் #கோவையில்_திரள்வோம் #நீதியை_வெல்வோம் #ReleaseLongTermPrisoners தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #மயிலாடுதுறை_மாவட்டம் 18.12.2021
நெல்லை பள்ளிக்கூடம் விபத்து, காயமடைந்த மாணவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய மஜகவினர்!
நெல்லையில் அமைந்துள்ள தனியார் பள்ளிக்கூட கழிவறையில் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர், 5-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் நெல்லை மாவட்ட செயலாளர் நிஜாம், அவர்கள் அரசு மருத்துவமனைக்கு நிர்வாகிகளுடன் நேரில் சென்று சிகிச்சை பெற்று வரும் மாணவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் மருத்துவமனையின் முதல்வர் டாக்டர், ரவிச்சந்திரன் அவர்களை சந்தித்து அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். இந்நிகழ்வில் தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் நெல்லை தமிழரசு, மஜக நிர்வாகிகள் முருகேசன், டில்லி சம்சு, சாகுல் ஹமீது, தோழர் வளவன், உள்ளிட்டோர் பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #நெல்லை_மாவட்டம் 18.12.2021
கத்தார் ஐதம நடத்திய இணையவழி கருத்தரங்கம்.. மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்பு..
தமிழகத்தில் 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் சிறைவாசிகளை சாதி, மத, வழக்கு, பேதமின்றி முன் விடுதலை செய்ய வலியுறுத்தி கத்தார் ஐக்கிய தமிழ்மன்றம் சார்பில் இணையவழி (zoom meeting) கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன்அன்சாரி, அவர்கள் பங்கேற்று சிறைவாசிகளின் விடுதலை விஷயத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய பணிகள் குறித்தும், பல்வேறு விசயங்கள் குறித்தும்,உரை நிகழ்த்தினார். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு, Sdpi கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக், ஆகியோரும் பங்கேற்று உரையாற்றினர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #தலைமையகம் 17.12.2021
கறம்பக்குடியில் மனிதநேய ஜனநாயக கட்சி ஆயத்த ஆலோசனை கூட்டம்..!
மனிதநேய ஜனநாயக கட்சி புதுக்கோட்டை மேற்கு மாவட்டம் கறம்பக்குடி நகர ஆயத்த ஆலோசனை கூட்டம் இன்று(16/12/2021) வியாழக்கிழமை கறம்பக்குடி மஜக நகர அலுவலகத்தில் நகர செயலாளர் ஆசை அப்துல்லா தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணை செயலாளர் லட்சுமணன் வரவேற்புரை ஆற்றினார் முடிவில் தொழிற்ச் சங்க நகர செயலாளர் ராஜ்கபூர் நன்றியுரை கூறினார். இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் முகமது ஜான் பங்கேற்று விளக்க உரையாற்றினார் இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானம் நிறைவேற்றபட்டது.... எதிர்வரும் ஜனவரி 08 தேதி அன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கோவையில் நடைபெறவிருக்கும் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் ஆயுள் சிறைவாசிகளை ஜாதி, மத, இன,வழக்கு பேதமின்றி விடுதலை செய்ய வலியுறுத்தி கோவை மத்திய சிறை முற்றுகை போராட்டத்தில் புதுக்கோட்டை மேற்கு மாவட்டத்தின் சார்பில் நூற்றுக்கணக்கானோர் ஏராளமான வாகனங்களில் சென்று கலந்துகொள்வது என்று தீர்மானம் செய்யப்பட்டது மேலும் இக்கூட்டத்தில் இளைஞரணி மாவட்ட செயலாளர் அப்துல் காதர்,தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் முகமது மன்சூர், நகர பொருளாளர் ஜியாவுதீன், நகர துணை செயலாளர்கள் கமர்தீன்,ரபியுதீன்,சர்புதீன் ,விவசாய அணி