மனிதநேய ஜனநாயக கட்சி புதுக்கோட்டை மேற்கு மாவட்டம் கறம்பக்குடி நகர ஆயத்த ஆலோசனை கூட்டம் இன்று(16/12/2021) வியாழக்கிழமை கறம்பக்குடி மஜக நகர அலுவலகத்தில் நகர செயலாளர் ஆசை அப்துல்லா தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணை செயலாளர் லட்சுமணன் வரவேற்புரை ஆற்றினார் முடிவில் தொழிற்ச் சங்க நகர செயலாளர் ராஜ்கபூர் நன்றியுரை கூறினார்.
இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் முகமது ஜான் பங்கேற்று விளக்க உரையாற்றினார் இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானம் நிறைவேற்றபட்டது….
எதிர்வரும் ஜனவரி 08 தேதி அன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கோவையில் நடைபெறவிருக்கும் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் ஆயுள் சிறைவாசிகளை ஜாதி, மத, இன,வழக்கு பேதமின்றி விடுதலை செய்ய வலியுறுத்தி கோவை மத்திய சிறை முற்றுகை போராட்டத்தில் புதுக்கோட்டை மேற்கு மாவட்டத்தின் சார்பில் நூற்றுக்கணக்கானோர் ஏராளமான வாகனங்களில் சென்று கலந்துகொள்வது என்று தீர்மானம் செய்யப்பட்டது
மேலும் இக்கூட்டத்தில் இளைஞரணி மாவட்ட செயலாளர் அப்துல் காதர்,தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் முகமது மன்சூர், நகர பொருளாளர் ஜியாவுதீன், நகர துணை செயலாளர்கள் கமர்தீன்,ரபியுதீன்,சர்புதீன் ,விவசாய அணி நகர செயலாளர் ராஜேந்திரன், மற்றும் நிர்வாகிகள் இளங்கோவன், சிராஜ்தீன்,அர்ஷத்,மைதீன்,ரிஸ்வான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
#கோவையில்திரள்வோம்
#நீதியைவெல்வோம் #ReleaseLongTerm Prisoners
தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#புதுக்கோட்டை_மேற்கு_மாவட்டம்