டிச.20,
மனிதநேய ஜனநாயக கட்சியின் தோப்புத்துறை முன்னணி செயல்வீரர்களில் ஒருவரான மணமகன் B. முகம்மது ரியாஸ் அவர்களுக்கும், மணமகள் J. ஜூனைனா அவர்களுக்கும் இடையில் இன்று திருமணம் நடைபெற்றது.
மண விழாவில் பங்கேற்று மணமக்களை பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் வாழ்த்தினார்.
இந்நிகழ்வில் மாநிலச் செயலாளர் நாச்சிக்குளம் தாஜ்தீன், ஜமாத் தலைவர் ஷேக் அப்துல்லாஹ், கல்வி சேவகர் ஆரிபா, மஜக மாநிலத் துணைச் செயலாளர் நாகை. முபாரக் உள்ளிட்டோரும் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
முன்னதாக திருமண விழாவை முன்னிட்டு கட்சிக் கொடியை புதுத்தெருவில் பொதுச் செயலாளர் ஏற்றினார்.
மாவட்ட துணைச் செயலாளர் ஷேக் அகமதுல்லா ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் தலைமை செயற்குழு உறுப்பினர் மன்சூர், நகரச் செயலாளர் கறுப்பு @ முகம்மது ஷெரிப், நகர துணைச்செயலாளர் முருகானந்தம், மனிதநேய தொழிற் சங்கம் செயலாளர் நிஜாம், இளைஞர் அணி செயலாளர் சதாம், மாவட்ட தொழில்நுட்ப அணி பொருளாளர் முபீன், மருத்துவ சேவை அணி செயலாளர் லைவ்லி யூசுப், விவசாய அணி செயலாளர் கவிஞர் சுப்பரமணியன் உள்ளிட்ட நகர, ஒன்றிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.
தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#நாகை_மாவட்டம்.