கத்தார் ஐதம நடத்திய இணையவழி கருத்தரங்கம்.. மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்பு..

தமிழகத்தில் 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் சிறைவாசிகளை சாதி, மத, வழக்கு, பேதமின்றி முன் விடுதலை செய்ய வலியுறுத்தி கத்தார் ஐக்கிய தமிழ்மன்றம் சார்பில் இணையவழி (zoom meeting) கருத்தரங்கம் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன்அன்சாரி, அவர்கள் பங்கேற்று சிறைவாசிகளின் விடுதலை விஷயத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய பணிகள் குறித்தும், பல்வேறு விசயங்கள் குறித்தும்,உரை நிகழ்த்தினார்.

இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு, Sdpi கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக், ஆகியோரும் பங்கேற்று உரையாற்றினர்.

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#தலைமையகம்
17.12.2021