நெல்லையில் அமைந்துள்ள தனியார் பள்ளிக்கூட கழிவறையில் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர், 5-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் நெல்லை மாவட்ட செயலாளர் நிஜாம், அவர்கள் அரசு மருத்துவமனைக்கு நிர்வாகிகளுடன் நேரில் சென்று சிகிச்சை பெற்று வரும் மாணவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
மேலும் மருத்துவமனையின் முதல்வர் டாக்டர், ரவிச்சந்திரன் அவர்களை சந்தித்து அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.
இந்நிகழ்வில் தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் நெல்லை தமிழரசு, மஜக நிர்வாகிகள் முருகேசன், டில்லி சம்சு, சாகுல் ஹமீது, தோழர் வளவன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#நெல்லை_மாவட்டம்
18.12.2021