ஈரோட்டில் சேலம், ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, கரூர் மாவட்ட மஜக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் ஈரோடு கிழக்கு மாவட்ட மஜக அலுவலகத்தில் நடைப்பெற்றது. இதில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்று கலந்துரையாடினார். அவருடன் துணைப் பொதுச் செயலாளரும், ஜனவரி - 8 முற்றுகை போராட்ட குழுவின் தலைவருமான செய்யது அஹமது பாரூக், அவர்களும் பங்கேற்றார். இதில் இம்மாவட்டங்களில் நடைப்பெற்று வரும் ஜனவரி 8 கோவை சிறை முற்றுகை போராட்டத்திற்கான ஆயத்தப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. தேசிய நெடுஞ்சாலைகள் உட்பட எங்கும் எழுதப்பட்டு வரும் சுவர் விளம்பரங்கள் குறித்து மாவட்ட செயலாளர்கள் விளக்கினர். வழிபாட்டு தலங்கள், கடை வீதிகள், கல்லூரிகள்,பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் ஆகிய மையங்களில் விளம்பர தட்டிகள் வைப்பது குறித்தும், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களின் பின்புறம் செய்யும் விளம்பர யுக்திகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. நிறைவாக ஈரோடு கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களிலிருந்து 3 ஆயிரம் பேரையும், சேலம், கரூர் மாவட்டங்களிலிருந்து குறைந்தது 2 ஆயிரம் பேரையும் திரட்டும் வகையில் வாகனங்களை முன் பதிவு செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது. பரப்புரைக் குழு, விளம்பரக் குழு, அழைப்பிதழ் குழு, வாகன முன்
மஜக தகவல் தொழில்நுட்ப அணி – MJK IT-WING
மஜக தகவல் தொழில்நுட்ப அணி – MJK IT-WING
ஜனவரி 08 கோவை சிறை முற்றுகை.. முதல் கட்ட துண்டு பிரசுரம் வெளியீடு..
மஜக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள ஜனவரி 8, கோவை சிறை முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்ட 10 வது நாளில் முதல் கட்ட துண்டு பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது. ஈரோட்டில் இன்று சேலம், ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, கரூர் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் ஈரோடு கிழக்கு மாவட்ட அலுவலகத்தில் நடைப்பெற்றது. அப்போது முதல் கட்ட துண்டு பிரசுரத்தை முறைப்படி பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி வெளியிட, துணைப் பொதுச் செயலாளரும், ஜனவரி 8- முற்றுகை போராட்ட குழுவின் தலைவருமான செய்யது அஹமது பாருக், பெற்றுக் கொண்டார். விரைவில் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களுக்கான ஸ்டிக்கர், கதவுகள் மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கான ஸ்டிக்கர், விழிப்புணர்வு பரப்புரைக்கான துண்டு பிரசுரம், சுவரொட்டி ஆகியன வெளியிடப்பட உள்ளது. தமிழகமெங்கும் வரையப்பட்டு வரும் சுவர் விளம்பரங்கள் பெரும் பரபரப்பையும், எழுச்சியையும் ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இன்றைய இந்நிகழ்வில் மாநில துணைச் செயலாளர் பாபு ஷாயின்ஷா , ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் ஷபி, ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் ஷாநவாஸ், சேலம் மாவட்ட செயலாளர் மஹ்பூப் அலி, கரூர் மாவட்ட செயலாளர் இஸ்மாயில், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். #கோவையில்_திரள்வோம் #நீதியை_வெல்வோம் #ReleaseLongTermPrisoners தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #ஈரோடு_கிழக்கு_மாவட்டம் 17.12.2021
ஜனவரி 8 கோவை சிறை முற்றுகை போராட்டம்! ஈரோடு மேற்கு மாவட்டம் சத்தியமங்கலம் நகர மஜக ஆயத்த ஆலோசனை கூட்டம்!
மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக ஜனவரி 8 அன்று "சாதி, மத வழக்கு பேதமின்றி 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி" கோவை மத்திய சிறைச்சாலை முற்றுகை போராட்டத்தை அறிவித்துள்ளது. போராட்டத்தின் ஆயத்த பணிகள் குறித்து ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் ஏ.கே. ஷாநவாஸ், அவர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சத்தியமங்கலம் நகரத்தின் சார்பாக முன்னெடுக்க வேண்டிய போராட்ட பரப்புரை பணிகள் குறித்தும், முற்றுகை போராட்டத்திற்கு திரளான மக்களை அழைத்து செல்வது எனவும் முடிவெடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் நசீர், வர்த்தக அணி பொருளாளர் பஷீர் சிராஜ், நகரச் செயலாளர் சலீம், நகர பொருளாளர் சையத் அலி, மருத்துவ சேவை அணி செயலாளர் ஆஷிக், இளைஞரணி செயலாளர் ரபீக், துணைச் செயலாளர் இலியாஸ், மாணவர் இந்தியா துணைச் செயலாளர் ஹாரூன், 12வது வார்டு பொறுப்பாளர் பாபு பாய் , உள்ளிட்டோர் பங்கேற்றனர். #கோவையில்_திரள்வோம் #நீதியை_வெல்வோம் #ReleaseLongTermPrisoners தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #ஈரோடு_மேற்கு_மாவட்டம் 16.12.2021
புதிதாக தேர்வான IMA தலைவர்… மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி நேரில் வாழ்த்து…!
இந்திய மெடிக்கல் அசோசியேஷன் (IMA) ஒன்றிய அரசால் அங்கீகரிக்ப்பட்ட அமைப்பாகும். இதன் தமிழ்நாடு தலைவராக சமீபத்தில் நடைப்பெற்ற தேர்தலில் டாக்டர் அபுல் ஹஸன், அவர்கள் பெரும் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 35 ஆயிரத்திற்கும் அதிகமான மருத்துவர்கள் அங்கம் வகிக்கும் இந்த அமைப்பு அரசினால் மதிப்பு மிக்க ஒன்றாக கவனிக்கப்படுகிறது. ஈரோட்டில் உள்ள சிட்டி மருத்துவமனைக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி, அவர்கள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். மருத்துவ சேவை மட்டுமின்றி இயற்கை விவசாயம், கல்வி விழிப்புணர்வு,சமூக நல்லிணக்கம், சூழலியல் என இயங்கி வருவதற்கு கிடைத்த நல்ல அங்கீகாரம் இது என அவருக்கு பொதுச் செயலாளர் பாராட்டு தெரிவித்தார். இவர் திருவாரூர் மாவட்டத்தை பூர்வீகம் கொண்டவர். தற்போது ஈரோட்டில் மக்கள் செல்வாக்கு மிக்க மருத்துவராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. இச்சந்திப்பின் போது மாவட்டச் செயலாளர் ஷபீக் அலி, மாவட்டத் துணைச் செயலாளர் பக்கீர் முகம்மது, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் திலிப் குமார், MJTS மாவட்ட செயலாளர் A. சபர் அலி, பகுதி செயலாளர்கள் ஹாரிஸ், ஜாவித் ஆகியோர் உடனிருந்தனர். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #ஈரோடு_கிழக்கு_மாவட்டம் 16.12.2021
நெய்வேலி NLC நிர்வாகத்தினரின் அலட்சிய போக்கால் தொழிலாளி மரணம்..! காத்திருப்பு போராட்டத்தில் மஜக பங்கேற்பு..
நெய்வேலி NLC நிறுவனத்தில் பணிபுரிந்த இளங்கோவன் என்பவர் கடந்த 14-12-2021 அன்று வேலை செய்து கொண்டிருக்கையில் மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கையில் ஈடுபடாமல் அலட்சிய போக்குடன் NLC நிர்வாகத்தினர் செயல்பட்டுள்ளனர். இந்நிலையில் சுமார் இரண்டு மணிநேரத்திற்கு பின்பாக அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மண்வெட்டும் இயந்திர வண்டியில் ஏற்றி 14 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்துள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே இளங்கோவன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். அவசரகால முதலுதவிக்கான எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் செயல்படும் NLC நிர்வாகத்தினரின் அலட்சிய போக்கால் உயிரிழந்த இளங்கோவன் குடும்பத்திற்கு உரிய நிவாரண நிதி வழங்க கோரியும், குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர பணி வழங்ககோரியும் அனைத்து கட்சி சார்பாக ஆலையின் சுரங்கம் 2க்கு முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெறுகிறது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக மாநில துணைச் செயலாளர் நெய்வேலி இப்ராஹிம் அவர்கள் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். உடன் தலைமை செயற்குழு உறுப்பினர் நூர் முகமது, மாவட்ட பொருளாளர் ரியாஸ் ரகுமான், மாவட்ட வர்த்தக அணி துணைச் செயலாளர் பாபர் ஒளி,