ஜனவரி 8 கோவை சிறை முற்றுகை போராட்டம்! ஈரோடு மேற்கு மாவட்டம் சத்தியமங்கலம் நகர மஜக ஆயத்த ஆலோசனை கூட்டம்!

மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக ஜனவரி 8 அன்று “சாதி, மத வழக்கு பேதமின்றி 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி” கோவை மத்திய சிறைச்சாலை முற்றுகை போராட்டத்தை அறிவித்துள்ளது.

போராட்டத்தின் ஆயத்த பணிகள் குறித்து ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் ஏ.கே. ஷாநவாஸ், அவர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் சத்தியமங்கலம் நகரத்தின் சார்பாக முன்னெடுக்க வேண்டிய போராட்ட பரப்புரை பணிகள் குறித்தும், முற்றுகை போராட்டத்திற்கு
திரளான மக்களை அழைத்து செல்வது எனவும் முடிவெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் நசீர், வர்த்தக அணி பொருளாளர் பஷீர் சிராஜ், நகரச் செயலாளர் சலீம், நகர பொருளாளர் சையத் அலி, மருத்துவ சேவை அணி செயலாளர் ஆஷிக், இளைஞரணி செயலாளர் ரபீக், துணைச் செயலாளர் இலியாஸ், மாணவர் இந்தியா துணைச் செயலாளர் ஹாரூன், 12வது வார்டு பொறுப்பாளர் பாபு பாய் , உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

#கோவையில்_திரள்வோம்
#நீதியை_வெல்வோம்
#ReleaseLongTermPrisoners

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#ஈரோடு_மேற்கு_மாவட்டம்
16.12.2021