மஜக இளைஞர் அணி காணொளி கூட்டம்!பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்பு!

மனிதநேய ஜனநாயக கட்சியின் இளைஞரணி சார்பில் ஜனவரி 8 முற்றுகைப் போராட்ட பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் இளைஞரணி மாநில செயலாளர் அசாருதீன்„ தலைமையில் காணொளியில் (ZOOM) நடைபெற்றது.

இதில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பங்கேற்று பேசினார்.

அப்போது தமிழகமெங்கும் நடைபெற்றுவரும் பரப்புரைகள், விளம்பரங்கள், கள சந்திப்புகள், மூலம் சிறை வாசிகளுக்கு ஆதரவாக மக்கள் எழுச்சி ஏற்பட்டிருப்பதாகவும், தன்னெழுச்சியாக வாகனங்களில் மக்கள் புறப்பட ஆயத்தமாகி இருப்பதாகவும் , எதிர்பார்த்ததை விட கூடுதலாக மக்கள் வரும் சூழல் உருவாகி இருப்பதாகவும் கூறினார்.

‘தமிழகத்தின் சாலைகள் எல்லாம் கோவையை நோக்கி ‘ என்ற நிலையை போராட்டக்களம் உருவாக்கியுள்ளது என்றவர் , இது யாருக்கும் நெருக்கடி கொடுப்பதற்கான போராட்டம் அல்ல என்றார்.

குரலற்ற மக்களுக்கு குரல் கொடுக்கும் மனிதாபிமான போராட்டம் இது என்றும், மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கான விழிப்புணர்வு என்றும் கூறினார்.

பிறகு இளைஞர் அணியினர் போராட்டக்களத்தில் 10 பேர் கொண்ட குழுக்களாக இயங்குவது குறித்தும் ,போக்குவரத்து சீரமைப்பு, குடிநீர் விநியோகம், பெண்கள் பகுதி பாதுகாப்பு, பொதுமக்களுக்கு உதவுதல், இடையூறுகளை சீர் செய்தல், கொரோனா முன் எச்சரிக்கைகளை பின்பற்ற செய்தல் என பணிகளை மேற்கொள்வது குறித்தும் ஆலோசனை வழங்கினார்.

இப்பணிகளுக்காக சீருடையுடன் இளைஞர் அணியினர் புத்தெழுச்சியோடு இப் பணிகளில் ஈடுபடும் வகையில் முதல்நாளே கோவைக்கு வர ஆயத்தமாகி வருவது குறிப்பிடத்தக்கது.

#கோவையில்_திரள்வோம்
#நீதியை_வெல்வோம்
#ReleaseLongTermPrisoners

தகவல்,

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#தலைமையகம்
03.01.2022