ஜனவரி 08 கோவை சிறை முற்றுகை.. முதல் கட்ட துண்டு பிரசுரம் வெளியீடு..

மஜக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள ஜனவரி 8, கோவை சிறை முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்ட 10 வது நாளில் முதல் கட்ட துண்டு பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது.

ஈரோட்டில் இன்று சேலம், ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, கரூர் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் ஈரோடு கிழக்கு மாவட்ட அலுவலகத்தில் நடைப்பெற்றது.

அப்போது முதல் கட்ட துண்டு பிரசுரத்தை முறைப்படி பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி வெளியிட, துணைப் பொதுச் செயலாளரும், ஜனவரி 8- முற்றுகை போராட்ட குழுவின் தலைவருமான செய்யது அஹமது பாருக், பெற்றுக் கொண்டார்.

விரைவில் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களுக்கான ஸ்டிக்கர், கதவுகள் மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கான ஸ்டிக்கர், விழிப்புணர்வு பரப்புரைக்கான துண்டு பிரசுரம், சுவரொட்டி ஆகியன வெளியிடப்பட உள்ளது.

தமிழகமெங்கும் வரையப்பட்டு வரும் சுவர் விளம்பரங்கள் பெரும் பரபரப்பையும், எழுச்சியையும் ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இன்றைய இந்நிகழ்வில் மாநில துணைச் செயலாளர் பாபு ஷாயின்ஷா , ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் ஷபி, ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் ஷாநவாஸ், சேலம் மாவட்ட செயலாளர் மஹ்பூப் அலி, கரூர் மாவட்ட செயலாளர் இஸ்மாயில், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

#கோவையில்_திரள்வோம்
#நீதியை_வெல்வோம்
#ReleaseLongTermPrisoners

தகவல்,

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#ஈரோடு_கிழக்கு_மாவட்டம்
17.12.2021