ஜன.21., திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் சமூக ஆர்வலர்கள் பொது அறிவிப்பு செய்து ஜல்லிக்கட்டுக்காக போராட அழைப்பு விடுத்ததன் பேரில் (20/1/2017) நேற்று மாணவர்கள், இளைஞர்கள், வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவர்களும் முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையத்தில் ஒன்று திரண்டனர்.
எப்போதும் கலவர சூழலில் சிக்குன்டு கிடக்கும் முத்துப்பேட்டையில் ஜல்லிக்கட்டு தடையை நீக்ககோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்
சமூக நல்லிணக்கம் ஏற்பட்டுள்ளது.
முத்துப்பேட்டையில் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தை நடத்துவதற்கு மஜகவின் மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் அவர்கள் தனது தனிப்பட்ட பேரிலேயே காவல் துறையிடம் அனுமதி பெற்றிருந்தார்.
போராட்டத்திற்கு அனுமதி வழங்கிய காவல்துறை ஆய்வாளர் அவர்கள் இன்று வெள்ளிக்கிழமையாக இருப்பதால் காலை 10 மணிமுதல் 12 :30 மணி வரை மட்டுமே அனுமதி வழங்க முடியும் நீங்கள் ஜும்மா தொழுகைக்கு செல்லுமுன் ஆர்ப்பாட்டத்தை முடித்துக்கொள்ளுங்கள் என்று கூறி இருந்தார்.
ஆனால் சமூக நல்லிணக்கத்தோடு நடைபெறும் ஆர்ப்பாட்டத்தை கண்ட ஆய்வாளர் அவர்கள் ஆர்ப்பாட்டக்காரர்களின் விருப்பத்திற்கேற்ப மாலை 4 மணி வரை அனுமதி வழங்கி ஒத்துழைத்தார்.
ஆகவே முஸ்லிம்கள் ஜும்மா தொழுகை முடிந்து வந்தும் போராட்டத்தை தொடர்ந்தார்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும் முத்துப்பேட்டையில் இதுபோன்ற சமூக நல்லிணக்கம் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
இப்போராட்டத்தில் உரையாற்றிய மஜக மாநில செயலாளரின் ஜல்லிக்கட்டு உரையும் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தியே அமைந்தது
குறிப்பிடதக்கது இதில் முத்துப்பேட்டை மற்றும் நாச்சிகுளம் மஜகவினர்
பெரும் திரளாக கலந்துகொண்டனர்.
தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி,
முத்துப்பேட்டை
20_01_2017