ஈரோட்டில் சேலம், ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, கரூர் மாவட்ட மஜக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் ஈரோடு கிழக்கு மாவட்ட மஜக அலுவலகத்தில் நடைப்பெற்றது.
இதில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்று கலந்துரையாடினார்.
அவருடன் துணைப் பொதுச் செயலாளரும், ஜனவரி – 8 முற்றுகை போராட்ட குழுவின் தலைவருமான செய்யது அஹமது பாரூக், அவர்களும் பங்கேற்றார்.
இதில் இம்மாவட்டங்களில் நடைப்பெற்று வரும் ஜனவரி 8 கோவை சிறை முற்றுகை போராட்டத்திற்கான ஆயத்தப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
தேசிய நெடுஞ்சாலைகள் உட்பட எங்கும் எழுதப்பட்டு வரும் சுவர் விளம்பரங்கள் குறித்து மாவட்ட செயலாளர்கள் விளக்கினர்.
வழிபாட்டு தலங்கள், கடை வீதிகள், கல்லூரிகள்,பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் ஆகிய மையங்களில் விளம்பர தட்டிகள் வைப்பது குறித்தும், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களின் பின்புறம் செய்யும் விளம்பர யுக்திகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
நிறைவாக ஈரோடு கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களிலிருந்து 3 ஆயிரம் பேரையும், சேலம், கரூர் மாவட்டங்களிலிருந்து குறைந்தது 2 ஆயிரம் பேரையும் திரட்டும் வகையில் வாகனங்களை முன் பதிவு செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.
பரப்புரைக் குழு, விளம்பரக் குழு, அழைப்பிதழ் குழு, வாகன முன் பதிவு குழு , நிதிக்குழு ஆகியவற்றை அமைப்பது குறித்தும் முடிவெடுக்கப்பட்டது.
இதில் மண்டல பொறுப்பாளரும், மாநில துணைச் செயலாளருமான பாபு ஷயின்ஷா, ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் ஷபிக் அலி, ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் ஷாநவாஸ், சேலம் மாவட்ட செயலாளர் மஹ்பூப்அலி, கரூர் மாவட்ட செயலாளர் இஸ்மாயில், உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
#கோவையில்_திரள்வோம்
#நீதியை_வெல்வோம்
#ReleaseLongTermPrisoners
தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#ஈரோடு_கிழக்கு_மாவட்டம்
17.12.2021