You are here

ஈரோடு தாவூதியா கல்லூரி முதல்வர் உமர் பாரூக் தாவூதி ஹஜ்ரத்துடன் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி சந்திப்பு..

1952 ஆம் ஆண்டில் ஈரோட்டில் உருவாக்கப்பட்ட தாவூதியா கல்லூரிக்கு இன்று மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி வருகை தந்தார்.

அவருடன் மஜக துணைப் பொதுச் செயலாளர் செய்யது அகமது பாரூக் அவர்களும் உடன் வருகை தந்தார்.

ஹஜ்ரத் அவர்களின் உடல் நலம் குறித்து பொதுச் செயலாளர் அவர்கள் விசாரித்து நீண்ட காலம் வாழ்ந்து நீங்கள் வழிகாட்ட வேண்டும் என்று பிரார்த்திப்பதாகவும் கூறினார்.

ஜனவரி 8, கோவை சிறை முற்றுகை போராட்டம் குறித்து தான் அறிந்ததாகவும், நல்லபடியாக நடந்தேறிட பிரார்த்திப்பதாகவும் கூறினார்.

அதன் பிறகு மாநில துணைச் செயலாளர் பாபு ஷஹின்ஷாவின் தந்தை மறைவுக்கு ஆறுதல் கூறிட அவர் வீட்டிற்கும், முன்னாள் மாவட்ட பொருளாளர் முகம்மது அலி அவர்களின் மறைவையொட்டி அவரது வீட்டிற்கும், சமீபத்தில் மறைந்த pfi மாவட்ட தலைவர் சாதிக் பாட்ஷா வீட்டிற்கும் சென்று ஆறுதல் கூறினார்.

இச்சந்திப்புகளின் போது ஈரோடு கிழக்கு மாவட்டச் செயலாளர் ஷஃபிக் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர் எக்ஸானுல்லா, மாவட்ட துணைச் செயலாளர்கள் பாபு, ரியாஸ், பக்கீர், ஜாபர், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் திலிப் குமார், MJTS மாவட்ட செயலாளர் சபர் அலி, MJVS மாவட்ட செயலாளர் சிராஜ், பகுதி செயலாளர்கள் ஹாரிஸ், ஜாவித் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.

தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#ஈரோடு_கிழக்கு_மாவட்டம்
17.12.2021

Top