மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஜனவரி 8, 2022 அன்று, ஆயுள் சிறைவாசிகளை பொதுமன்னிப்பின் கீழ், சாதி, மத வழக்கு பேதமின்றி விடுதலை செய்யக்கோரி கோவை சிறைச்சாலை முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகமெங்கும் பெரும் எதிர்பார்ப்பை இந்த அறிவிப்பு ஏற்படுத்தி உள்ளது.
மஜக-வின் சார்பில் சுவர் விளம்பரங்கள் எழுதும் பணிகளும், வாகனங்களை முன்பதிவு செய்யும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மாவட்ட வாரியான ஆலோசனை கூட்டங்கள், மாவட்ட செயல்வீரர்கள் கூட்டங்களும் ஏற்பாடு செய்யப்பட்டு நடந்து வருகிறது.
அதன் ஒரு நிகழ்வாக திருவாரூர் மாவட்ட மஜக சார்பில் நிர்வாகிகள் பங்கேற்ற ஆயத்த ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் சீனி ஜெகுபர் சாதிக் தலைமையில் நடைபெற்றது.
இதில் மாநில துணைச்செயலாளரும், மாவட்ட மேலிட பொறுப்பாளருமான நாகை முபாரக் அவர்கள் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினார்.
மாவட்டத்தில் இதுவரை 40க்கும் மேற்பட்ட இடங்களில் சுவர் விளம்பரங்கள் எழுதப்பட்டுள்ளதாகவும், மேலும் 35 இடங்களில் வரைவது என்றும், 10 பேருந்துகள் மற்றும் 30-க்கும் மேற்பட்ட இதர வாகனங்களில் கோவை சிறைச்சாலை முற்றுகை போராட்டத்திற்கு புறப்படுவது என்றும். அதற்காக மக்களைத் திரட்டும் பணிகளை குழுக்கள் அமைத்து மேற்கொள்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் ஷேக் அப்துல்லா, அணி நிர்வாகிகள் நஜிமுதீன், ரஹ்மத்துல்லா, நூருல் அமீன், ஆசிப், ஜபருல்லா, ரிஜ்வான் முகம்மது, ஒன்றிய செயலாளர்கள் குத்புதீன், அலீம், அகமது ஜலாலுதீன், ஷேத்தப்பா, நிர்வாகிகள் முகம்மது ரபீக், S. ஹபி, சித்திக், ஹாரிஸ், ஜலாலுதீன், சேட்டு ஆகியோர் கலந்து கொண்டனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#திருவாரூர்_மாவட்டம்
17.12.2021