ஜனவரி:25, சேலம் மாவட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பணிகளை செம்மைப்படுத்தும் வகையில் நேற்று சேலத்தில் மாவட்ட கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது.
இதில் துணைப் பொதுச் செயலாளர் செய்யது அகமது பாரூக், பங்கேற்று நிர்வாக சீரமைப்பு மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து விவாதித்தார்.
மாநில துணைச் செயலாளரும், மேலிட பொறுப்பாளருமான பாபு ஷாகின்ஷா, அவர்கள் கருத்துகளை கேட்டறிந்தார்.
இந்திகழ்வில் தமிழ் மாநில தேசிய லீக் கட்சியை சேர்ந்த சகோதரர்கள் துணைப் பொதுச் செயலாளர் செய்யது அகமது பாரூக், தலைமையில் தங்களை மஜக வில் இணைத்துக் கொண்டனர்.
ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் கட்சிப் பணிகளை சேலம் மாவட்டத்தில் விரிவுப்படுத்தும் வகையில் பொறுப்புக் குழு ஒன்று தலைமை செயற்குழு உறுப்பினர் சாதிக், தலைமையில் அமைக்கப்பட்டது.
மாநகரின் அனைத்து வார்டுகளிலும் கட்சியை வலுப்படுத்தி, புறநகரங்களிலும் கட்சியை கட்டமைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.
ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு நிர்வாகிகள் அனைவரும் புத்தெழுச்சியோடு புறப்பட்டனர்.
தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#சேலம்_மாவட்டம்
24.1.2022