சென்னை.ஜன.24., தமிழ் செய்தி உலகில் புதிய வரவாக News தமிழ் 24×7 என்கிற செய்தி தொலைக்காட்சி ஜனவரி 23 அன்று தொடங்கப்பட்டது.
பிரபல கேபிள் நிறுவனமான டி.சி.சி.எல் பின்னணியில் பிரம்மாண்டமான தொழில்நுட்பங்களோடு உருவாகியிருக்கிறது.
இன்று அழைப்பினை ஏற்று எழும்பூரில் உள்ள அந்நிறுவன தலைமையகத்திற்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் நேரில் வருகை தந்து அதன் இயக்குநர், தலைமை செய்தி ஆசிரியர், மூத்த ஆசிரியர் ஆகியோரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
பிறகு மூத்த செய்தி ஆசிரியர் கண்ணன் அவர்கள் தொழில்நுட்ப பிரிவின் துறை அலுவலங்களுக்கு நேரில் அழைத்துச்சென்று காண்பித்தார்.
ஜனநாயகத்தின் பல்வேறு அம்சங்களையும், அனைத்து தரப்பு மக்களின் உணர்வுகளையும் பிரதிபலிக்கும் வகையில் இத்தொலைக்காட்சி செயல்பட வேண்டும் என்று வாழ்த்துவதாக பொதுச்செயலாளர் அவர்கள் கூறினார்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#தலைமையகம்
24.01.2022