இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகர் சார்பாக மஜகவின் இரண்டாம் ஆண்டு துவக்கவிழா முன்னிட்டு கொடி ஏற்றும் நிகழ்ச்சி நகர செயலாளர் எமனை சாகுல் தலைமையில் நடைபெற்றது. பரமக்குடி மேலபள்ளிவாசல் கிளை சார்பாக மேலபள்றிவாசல் அருகிலும், எமனேஸ்வரம் கிளையின் சார்பாக கான்ஷாகிப் திடல் மற்றும் திப்புசுல்தான் தெரு ஆகிய இரு இடங்களில் பிரம்மான்டமாக நம்முடைய புரட்சி கொடி பட்டொளிவீசி பறக்கவிடப்பட்டது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் அண்ணன் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது M.com அவர்கள் நம் புரட்சிகொடியை ஏற்றி சிறப்புரை ஆற்றினார்கள். இராமநாதபுரம் மாவட்செயளாளர். முஹம்மது இலியாஸ், பொருளாளர்.Mmசெய்யது, மா.து.செ. அப்துல்கபூர், மற்றும் பைசல் ரசித், பரமக்குடி பொருளாளர் அப்துல்அஜிஸ் மாணவர்இந்தியா செயளாளர் ஆசிக். எமனேஸ்வர கிளை செயளாளர். ஹபிப்ரஹ்மான் பொருளாளர் தமீம்அன்சாரி, மற்றும் மத்தியசென்னை மாவட்ட செயளாளர் முஹம்மது ஹாலித் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். தகவல் தொழில்நுட்ப அணி #MJK_IT_WING மனிதநேய ஜனநாயக கட்சி இராமநாதபுரம் மாவட்டம்
இரண்டாம் ஆண்டில் மஜக
இரண்டாம் ஆண்டில் மஜக
திருவாரூர் மாவட்டம் எரவாஞ்சேரி கிளை கூட்டம்…
திருவாரூர்.மார்ச்.03., கடந்த 02/03/2017 அன்று மனிதநேய ஜனநாயக கட்சி திருவாரூர் மாவட்டம் எரவாஞ்சேரி கிளை ஆலோசனை கூட்டம் முன்னால் மாவட்ட துணை செயலாளர் அபுல் கலாம் ஆசாத் அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் PMA.சீனி ஜெகபர் சாதிக் தலைமையிலும், மாவட்ட துணை செயலாளர் அத்திக்கடை லியாகத் அவர்களும் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் முகம்மது அசாருதீன் ஆகியோர் முன்னிலையில் கிளை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.. மனிதநேய ஜனநாயக கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு அப்பகுதியில் மாவட்ட செயலாளர் PMA.சீனி ஜெகபர் சாதிக் மற்றும் முன்னால் மாவட்ட துணை செயலாளர் எரவாஞ்சேரி அபுல் கலாம் ஆசாத் அவர்களும் இரண்டு புதிய கொடி கம்பத்தில் கொடி ஏற்றி சிறப்பித்தனர். மற்றும் 20 புதிய உறுப்பினர்கள் மனிதநேய ஜனநாயக கட்சியில் இணைத்தனர். தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி. (MJK IT-WING) திருவாரூர் மாவட்டம் 02/03/2017
ஆலந்தூரில் மஜக இரண்டாம் ஆண்டு துவக்க கொடியேற்று நிகழ்வு…
காஞ்சி.மார்ச்.01., காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் ஆலந்தூரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு ஆதம்பாக்கம், மற்றும் ஆலந்தூர்க்குட்பட்ட பல்வேறு இடங்களில் கொடியேற்றப்பட்டது. இதில் மஜக மாநில பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA அவர்கள் கொடிகளை ஏற்றி உரை நிகழ்த்தினார்கள். திரளான மஜகவின் தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் கொடிகளுடன் அணிவகுத்தனர். இந்நிகழ்வில் மாநில துணை செயலாளர் பல்லாவரம் ஷபி, மாநில விவாசய அணி செயலாளர் நாகை முபாரக், தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் ஏ.எம்.ஹாரிஸ், மாவட்ட செயலாளர் ஜிந்தா மதார், மாவட்ட பொருளாளர் சலீம் மற்றும் மாவட்ட, பகுதி, வட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர். தகவல் :மஜக தகவல் தொழில்நுட்ப அணி. (MJK IT-WING) காஞ்சி வடக்கு. 01.03.2017
மஜக ஈரோடு கிழக்கு மாவட்டம் சார்பில் இரண்டாம் ஆண்டு நிகழ்வு…
ஈரோடு.மார்.01., இரண்டாம் ஆண்டில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் ஈரோடு கிழக்கு மாவட்டம் பூம்புகார் நகர் கிளை மற்றும் கமலா நகர் கிளையில் மாவட்ட பொறுப்புக்குழு தலைவர் பாபு ஷாகீன் ஷா மற்றும் சுல்தான்பேட்டை பகுதியில் மாவட்ட பொருலாளர் முகமது அலி ஆகியோர் கொடியேற்றி இனிப்புகளை வழங்கினர். நெறி பவுண்டேஷன் அநாதை இல்லத்திற்கு சென்று மதிய உணவு வழங்கப்பட்டது.. இந்நிகழ்வில் மாவட்ட தொழிற்சங்க செயலாளர் ஸ்டீல் நஜிம், பொருலாளர் #ஹாலித்_கான் மாவட்ட இளைஞரணி செயலாளர் #யாசர்_அரபாத் , முன்னாள் மாவட்ட செயலாளர் ஷபீக் ,முஸ்தபா , சாகுல், குளம் ஜாகீர், சம்சுதீன், ஈரோடு எக்சான் ஆகியோர் கலந்து கொண்டனர்.. தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி. (MJK_IT_WING) ஈரோடு கிழக்கு மாவட்டம் 28.02.2017
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் கிளையில் மஜக இரண்டாம் ஆண்டு துவக்க நிகழ்வு…
தூத்துக்குடி.மார்.01., மனிதநேய ஜனநாயக கட்சியின் இரண்டாவது ஆண்டு துவக்க நாளான 28-02-2017 அன்று தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் கிளையில் முதன்முறையாக மனிதநேய ஜனநாயக கட்சியின் கொடி ஏற்றப்பட்டது. ஆத்தூர் கிளை செயலாளர் அன்வர் பாஷா முன்னிலையில் மாவட்ட செயலாளர் ஜாகிர்உசேன் அவர்கள் கொடியெற்றிவைத்து மனிதநேய ஜனநாயக கட்சி உருவான விதம் மற்றும் மனிதநேய ஜனநாயக கட்சியின் செயல்பாடு குறித்து நிர்வாகிகள் மற்றும் அங்கு கூடியிருந்த பொதுமக்களிடம் விளக்கினார்... இந்நிகழ்ச்சியில் ஆத்தூர் கிளை நிர்வாகிகள், காயல்பட்டினம் நகர நிர்வாகிகள் மற்றும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் கொடியெற்றிவைத்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி (MJK IT-WING) தூத்துக்குடி மாவட்டம். 28.02.2017