தம்மாம். ஏப்.14., இன்று இஸ்லாமிய கலாச்சார பேரவை தம்மாம் மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இதில் மண்டல ஆலோசகர் செய்யது ஹமீது அவர்கள் தலைமை தாங்கினார். மண்டல துணைச் செயலாளர் (பொருளாளர் கூடுதல் பொருப்பு) ஆவூர் ஜாகிர் உசேன் அவர்கள் முன்னிலை வகித்தார்கள். மற்றும் மண்டல ஒருகிணைப்பாளர் சகோ.முகம்மது இல்யாஸ், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் சகோ.உஸ்மான் அலி, அல் கோபார் கிளை துணை செயலாளர் சகோ.இர்பான் அலி, பொருளாளர் சகோ.உமர் முக்தார், துணைச் செயலாளர் சகோ.அப்பாஸ் ஆகியோர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர். இந்த கூட்டத்தில் மண்டல செயலாளர் செய்யது அலி அவர்கள் இரத்த தானம் பற்றி சிறப்புரையாற்றினர்கள் அதில் கிளை வாரியாக அமீர்களை நியமனம் செய்து பொறுப்பாளர்களை நியமனம் செய்ய வேண்டும் என்று தனது கருத்தை வலியுறுத்தினார்கள் மண்டல நிர்வாகிகள் அனைவருடைய கருத்துக்கள் கேட்கப்பட்டு ஆலோசனைக்கு பிறகு கிளை வாரியாக பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டார்கள். அல் ஹம்துலில்லாஹ்.. அல் கோபார் பொருப்பாளர்கள் விபரம்... சகோ. இர்பான் அலி (அமீர்), சகோ. செய்யது அலி, சகோ. அஜீஸ், சகோ. உமர் முக்தார், சகோ. இஜாஸ், சகோ. ஹலீம் ஆகியோர் நியமனம் செய்யப்பகிட்டனர். தம்மாம் பொறுப்பாளர்கள் விபரம்... சகோ. சாஹிப் (அமீர்), சகோ. சாகுல் ஹமீத் (சேத்தான் நான), சகோ.
புதிய கிளை
சுகுணாபுரத்தில் மஜக புதியகிளை துவக்கம் மற்றும் அலுவலகம் திறப்பு!!
கோவை:ஏப்:02., கோவை தெற்கு பகுதிக்குட்பட்ட சுகுணாபுரம் பகுதியில் மனிதநேய ஜனநாயக கட்சி புதிய கிளை துவக்கம் மற்றும் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. மாவட்டசெயலாளர் MH.அப்பாஸ் கிளை அலுவலகத்தை திறந்து வைத்தார். மாநில துணை செயலாளர் A.அப்துல்பஷீர், மாநில செயற்குழு உறுப்பினர் குனிசை ஷாஜகான், மாவட்ட துணைசெயலாளர்கள் TMS.அப்பாஸ், ABTபாருக், ரபீக் ஆகியோர் புதியகிளை நிர்வாகிகளை அறிமுகம் செய்து உரையாற்றினார்கள். புதிய நிர்வாகிகள் பட்டியல்... கிளைசெயலாளர் முஜிப்ரஹ்மான் 8428241908 கிளைபொருளாளர் அப்துல்ரஹ்மான் 9944611886 துணை செயலாளர்கள் நவ்சாத் 702266677 முகமதுஅலி9042015066 பசீர் 9042098425 இந்நிகழ்வில் தெற்கு பகுதி செயலாளர் காஜா, பொருளாளர் நிவாஸ், துணைசெயலாளர்கள் குனிசை அப்பாஸ், ஜக்கிரியா, யூசுப் மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர் தகவல் : தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. #MJK_IT_WING கோவை மாநகர் மாவட்டம் 02.04.2017
ஆந்திர எல்லை அருகில் வேலூர் (மே) மாவட்டம் கொள்ளப்பள்ளியில் மஜக கிளை உதயம்…
வேலூர்.மார்ச்.21., தமிழகம் மற்றும் ஆந்திர எல்லைக்கு அருகில் வேலூர் மேற்கு மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம் கொள்ளப்பள்ளியில் மஜக புதிய கிளை நேற்று உதயமானது. நேற்று குடியாத்தம் ஒன்றியம் கொள்ளப்பள்ளியில் மஜக ஆலோசனை கூட்டம் ஒன்றிய செயலாளர் Y.இம்தியாஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் ஒன்றிய துணை செயலாளர் முபாரக், ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் இஸ்மாயில் குடியாத்தம் நகர பொருளாளர் முபாரக், துணை செயலாளர் சலீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை செயலாளர் S.M.D நவாஸ் மற்றும் மாவட்ட மருத்துவ அணி பொருளாளர் SM.நிஜாமுதீன் ஆகியோர் சிறப்பு அழைப்பாராக கலந்துக்கொண்டு மஜகவின் பணிகள் குறித்து விளக்கினார்கள், கொள்ளப்பள்ளி பைரோஸ் பாஷா, அஷ்ரப் அலி நிஜாமுதீன் ஆகியோர் கூட்டத்தை ஏற்பாடு செய்தனர் இதில் கொள்ளப்பள்ளியை சார்ந்த இளைஞர்கள் ஆர்வமாக கலந்துக்கொண்டு அனைவரும் தங்களை மஜகவில் இணைந்துக்கொண்டார்கள். தகவல் : தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி, வேலூர் மேற்கு மாவட்டம். #MJK_IT_WING 21.03.2017
வேலூர் (மே) மாவட்டம் பேர்ணாம்பட்டு ஒன்றியம் கடாம்பூரில் மஜக கிளை உதயம்…
வேலூர்.மார்ச்.20., வேலூர் மேற்கு மாவட்டம் பேர்ணாம்பட்டு ஒன்றியம், கைலாசகிரி ஊராட்சி கடாம்பூரில் புதிய கிளை உதயம் . பேர்ணாம்பட்டு ஒன்றியம் கடாம்பூரில் நடைப்பெற்ற ஆலோசனை கூட்டத்திற்க்கு மாவட்ட செயலாளர் J.M.வசீம் அக்ரம் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர்கள் சையத் ஜாவித், S.M.D நவாஸ் மற்றும் பேர்ணாம்பட்டு நகர செயலாளர் K.ரசீத் அஹமத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடாம்பூர் கதீர் அஹ்மத், சதீஸ், நசீர் ஆகியோர் கூட்டத்தை ஏற்பாடு செய்தனர் இதில் கைலாசகரி ஊராட்சியை சார்ந்தவர்கள் கலந்துக்கொண்டனர். பின்பு அனைவரயும் மஜகவின் பணிகளை விளக்கி மாவட்ட நிர்வாகிகள் உரை நிகழ்த்தினர். அதன்பின் அனைவரும் ஆர்வமாக தங்களை மஜகவில் இணைந்துக்கொண்டார்கள். தகவல் : தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி, வேலூர் மேற்கு மாவட்டம். #MJK_IT_WING 19.03.2017
திருவாரூர் மாவட்டம் எரவாஞ்சேரி கிளை கூட்டம்…
திருவாரூர்.மார்ச்.03., கடந்த 02/03/2017 அன்று மனிதநேய ஜனநாயக கட்சி திருவாரூர் மாவட்டம் எரவாஞ்சேரி கிளை ஆலோசனை கூட்டம் முன்னால் மாவட்ட துணை செயலாளர் அபுல் கலாம் ஆசாத் அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் PMA.சீனி ஜெகபர் சாதிக் தலைமையிலும், மாவட்ட துணை செயலாளர் அத்திக்கடை லியாகத் அவர்களும் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் முகம்மது அசாருதீன் ஆகியோர் முன்னிலையில் கிளை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.. மனிதநேய ஜனநாயக கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு அப்பகுதியில் மாவட்ட செயலாளர் PMA.சீனி ஜெகபர் சாதிக் மற்றும் முன்னால் மாவட்ட துணை செயலாளர் எரவாஞ்சேரி அபுல் கலாம் ஆசாத் அவர்களும் இரண்டு புதிய கொடி கம்பத்தில் கொடி ஏற்றி சிறப்பித்தனர். மற்றும் 20 புதிய உறுப்பினர்கள் மனிதநேய ஜனநாயக கட்சியில் இணைத்தனர். தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி. (MJK IT-WING) திருவாரூர் மாவட்டம் 02/03/2017