மனிதநேய ஜனநாயகக் கட்சி யின் மாநில பொருளாளர் எஸ்.எஸ். ஹாருன்ரஷித் M.com அவர்கள் பாண்டிச்சேரி வருகை புரிந்தார்கள். கட்சி பணிகள் குறித்து. நிர்வாகிகளை சந்தித்து. ஆலோசனை வழங்கிணார்கள். தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு.
செய்திகள்
பண்ருட்டியில் கொடி ஏற்று விழாவில் மஜக மாநில பொதுச் செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M. தமிமுன்அன்சாரி M.L.A. அவர்கள் பண்ருட்டியில் கொடி ஏற்று விழாவில் கலந்து கொண்டு இரன்டு இடங்களில் கொடி ஏற்றினார்கள். நிகழ்ச்சியில் கடலுர் மாவட்ட நிர்வாகிகள், புதுவை நிர்வாகிகள், விழுப்புரம் மாவட்டம் நிர்வாகிகள், பண்ருட்டி நகர கழக நிர்வாகிகள், மங்களம் பேட்டை நிர்வாகிகள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள். தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு
சமூக_நல்லிணக்க_பொதுக்கூட்டம்!
கடலூர் மாவட்டம் நெல்லிகுப்பத்தில் ஜமாத்துகளின் ஆதரவோடு இளைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட சமூக நல்லிணக்க பொதுக்கூட்டத்தில் மஜக பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA, முஸ்லிம் லீக் பொதுச்செயலாளர் அபுபக்கர் MLA. INTJ தலைவர் பாக்கர், விசிக துணை பொதுச்செயலாளர் ஆளூர் ஷா நவாஸ், ஜமாத்துல் உலமா மாநில துணை தலைவர் தர்வாஷ் ரஷாதி உள்ளிட்டோர் உரையாற்றினர். பெண்கள் உள்ளிட்ட ஆயிரத்திர்க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தகவல்; மஜக ஊடக பிரிவு கடலூர் வடக்கு.
தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்…
(மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் வாழ்த்து செய்தி) உலகமெங்கும் வாழும் 10 கோடிக்கும் மேற்பட்ட தமிழ் மக்களின் திருநாளாக பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. வயலில் ஏர் பூட்டி; சேறு மிதித்து; விதை விதைத்து; விவசாயம் வளர்த்து; அதன் அறுவடையை கொண்டாடும் உழைக்கும் வர்க்கத்தின் மகிழ்ச்சிக்குரிய தினமாக பொங்கல் திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. 5 ஆயிரம் ஆண்டுகால வரலாறு கொண்ட தமிழ் இனத்தின் பொதுப் பண்டிகையை, இடைக்காலத்தில் சிலர் வழிபாட்டு ரீதியாக திசை மாற்றினார்கள். இன்று புத்தெழுச்சிமிக்க தமிழ் தலைவர்களாலும், அறிஞர்களாலும் பொங்கல் பண்டிகை சார்பற்ற -வழிபாடுகளற்ற-அறுவடைத் திருநாளாக - சமத்துவ பொங்கலாக முன்னெடுக்கப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது. தமிழர் விளையாட்டாம் ஜல்லிக்கட்டை மீட்டெடுத்தல், இயற்கை விவசாயத்தை முன்னெடுத்தல், நீராதாரங்களை பாதுகாத்தல் ஆகிய உயரிய லட்சியங்களை நிறைவேற்ற இந்நாளில் சபதம் ஏற்போம்! தமிழர் ஒற்றுமைக்காக பாடுபடுவோம்! உலகமெங்கும் வாழும் தமிழ் சொந்தங்களுக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மனமார்ந்த தமிழர் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். இவண், M.தமிமுன் அன்சாரி MLA, பொதுச்செயலாளர், மனிதநேய ஜனநாயக கட்சி(MJK). 13/01/2017
திண்டுக்கல்லில் தடையை மீறி மஜக ஜல்லிக்கட்டை நடத்தும்.
மதுரை ஆர்ப்பாட்டத்தில் மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி அறிவிப்பு இன்று மதுரையில் ஜல்லிக்கட்டை ஆதரித்து மனிதநேய ஜனநாயக கட்சி, தமிழக கொங்கு இளைஞர் பேரவை, முக்குலத்தோர் புலிப்படை ஆகிய கட்சிகள் இணைந்து மக்கள் திரள் போராட்டத்தை நடத்தினர். இதில் மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA, தனியரசு MLA, கருணாஸ் MLA ஆகியோர் உரையாற்றினர். இதில் மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி பேசியதின் சுருக்கம் பின்வருமாறு தமிழ்ச் சமுதாயத்தின் உறவுகளே.... தமிழ்ச் சமுதாயத்தின் பாரம்பரிய உரிமை காக்க நாம் ஒன்று கூடியிருக்கிறோம். இங்கு தேவரையாவின் வாரிசுகள், தீரன் சின்னமலையின் வாரிசுகள், காயிதே மில்லத்தின் உறவுகள் என எல்லோரும் ஒன்று சேர்ந்திருக்கிறோம். தமிழ் இன ஒற்றுமைக்காக அனைத்து சமூகங்களையும் ஒருங்கிணைப்போம். தமிழ் சமுதாயத்தின் பண்பாட்டு நிகழ்வுகளில் ஒன்று ஜல்லிக்கட்டு, உலகம் முழுக்க வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு பெயர்களில் இது நடைபெறுகிறது. தாய்லாந்து, ஸ்பெயின், மெக்ஸிகோ, நியுசிலாந்து என பல நாடுகளில் உள்ளது. வெளிநாடுகளில் போட்டி முடிந்ததும் காளைகளை கொன்று விடும் பழக்கம் உள்ளது. ஆனால் இங்கு போட்டி முடிந்ததும் காளைகளுக்கு பரிசளித்து கொண்டாடுகிறோம். ஆனால்,காளைகளை வதை செய்கிறோம் என்கிறார்கள், கேரளாவில் 100 யானைகளை வைத்து நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள்.யானைகளை இதற்காக இம்சிக்கிறார்கள்.இதை உங்களால்