ஜன.19., சென்னை மெரீனா கடற்கரையில் மாணவர் இந்தியா மத்திய சென்னை மாவடடச் செயலாளர் பைசல் ரஹ்மான் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் மாணவர்களுடன் கலந்துகொண்டு தங்கள் ஜல்லிக்கட்டு ஆதரவாகவும், பீட்டாவை தடைசெய்ய கோரியம் கோஷங்களை பதிவுசெய்தனர். தகவல் : மாணவர் இந்தியா ஊடகபிரிவு, மத்திய சென்னை 19_01_17
செய்திகள்
அந்தியூர் நகரத்தின் சார்பாக ஜல்லிகட்டின் தடையை நீக்ககோரி பேரணி…
ஜன.18., ஈரோடு மேற்கு மாவட்டம் அந்தியூர் நகரத்தின் சார்பாக ஜல்லிகட்டின் தடையை நீக்ககோரி பேரணி நடைப்பெற்றது. இதில் ஆயிரக்கான மாணவர்கள் கலந்துகொண்டனர் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் ஷானவாஸ் கண்டண கோஷங்களை எழுப்பினார் உடன் மனித உரிமை அணி மாவட்ட செயலாளர் உஸ்மான் அலி, மாணவர் இந்தியா அப்பாஸ், கோபி நகர செயலாளர் சாதிக் பாஷா, அந்தியூர் நகர செயலாளர் ஷபி மற்றும் இளைஞரணி நிர்வாகிகள் முகமது சித்தீக், இளங்கோவன், ஹரி, பாரூக், பிலால் ஆகியோர் திரளாக கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பைக் தெரிவித்தனர். தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி (IT-Wing) ஈரோடு மேற்கு மாவட்டம்
கோவை ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் மஜக மாவட்ட நிர்வாகிகள்…
ஜன.18., ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக இன்று கோவையில் நடைபெற்று வரும் மாணவர் போராட்டத்திற்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் M.H.அப்பாஸ் அவர்கள் தலைமையில் செஞ்சிலுவை சங்கத்தில் இருந்து ஊர்வலமாக வ.ஊ.சி மைதானம் சென்று அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அவர்களுக்கு தேவையான தண்ணீர் மற்றும் பிஸ்கட் ஆகியவைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் ATR.பதுருதீன் மாவட்ட துணை செயலாளர்கள் பாருக், சிங்கை சுலைமான், அமீர் அப்பாஸ், இளைஞர் அணி பைசல், தொழிற்சங்கம் அப்பாஸ், வணிகர் சங்கம் அக்பர் அனைத்து பகுதி மற்றும் கிளைகழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமாணோர் கலந்துகொண்டனர். தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி(IT-WING) கோவை மாநகர் மாவட்டம் 18.1.17
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடும் மாணவர்களுடன் மாணவர் இந்தியா நிர்வாகிகள்…
ஜன.18., மாணவர் இந்தியா வடசென்னை மாவட்ட செயலாளர் அலாவுதீன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் தலைமையில் இன்று ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும் பீட்டாவுக்கு எதிராகவும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு தண்ணீர் மற்றும் பிஸ்கட் பாகெட்டுகள் விநியோகம் செய்யப்பட்டது. தகவல் : மாணவர் இந்தியா ஊடகபிரிவு, வடசென்னை மாவட்டம் 18_01_17
மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் தலைமையில் மாதாவரம் அகர்ஸன் கல்லூரியில் வகுப்பு புறக்கணிப்பு..
ஜன.18., ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்தும் பீட்டவை தடைசெய்ய கோரியும் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் அப்துல் ரஜாக் தலைமையில் மாதாவரம் அகர்ஸன் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். போராட்டத்தை கைவிடுமாரு தாசில்தார் பேச்சுவார்த்தைக்கு பின் கோரிக்கை அடங்கிய கடிதத்தை தாசில்தாரிடம் கொடுத்து விட்டு கல்லூரி மாணவர்கள் போராட்டம் தொடரும் என்று மாணவர் இந்தியா சார்பில் அறிவிக்கப்பட்டது. தகவல்: மாணவர் இந்தியா ஊடகபிரிவு, திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் 18_01_17