கருணாஸ்MLA மஜக அலுவலகம் வருகை…

karunas mla

சிவகங்கை.நவ.19.., முக்குலத்தோர் புலிப்படை தலைவரும் திருவாடானை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் MLA மனிதநேய ஜனநாயக கட்சியின் சிவகங்கை மாவட்ட அலுவலகத்திற்கு வருகை தந்தார்கள். மஜக சார்பில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

மஜக மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்களையும், தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா நாசர் அவர்களையும் தனது இல்லத் திருமணத்திற்கு அவசியம் வர வேண்டும் என்று அழைப்பு கொடுத்தார்கள்.

மனிதநேய சொந்தங்களுடன் சிறிது நேர நல்லெண்ண உரையாடலுக்குப் பின் தனது திருவாடானை தொகுதிக்கு புறப்பட்டுச் சென்றார்.

உடன் மஜக நகரச் செயலாளர் உமர் கத்தாப், பொருளாளர் முபாரக், கான்சா ஜமால், வாணியம்பாடி அக்மல், வைத்தியர் முஸ்தபா, கான்சா உஸ்மான், நஸிர், தப்பாத்தை சாகுல் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#சிவகங்கை
18-11-2019