மஜக தலைமையகத்தில் MJTS சென்னை மண்டல செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்..!

மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பு அமைப்பான மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கத்தின் (MJTS) சென்னை மண்டல செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் MJTS மாநில துணை செயலாளர் இப்ராஹிம் தலைமையில் இன்று மஜக தலைமையகத்தில் நடைபெற்றது.

இதில் மஜக மாநில செயலாளர் பல்லாவரம் ஷஃபி, மாநில துணை செயலாளர் அஸாருதீன் ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.

இக்கூட்டத்தில் எதிர்வரும் பிப்ரவரி-28 அன்று மஜக 8-ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு புதிய ஆட்டோ ஸ்டான்டுகள் திறப்பது என்றும், பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகள் மற்றும் கொடியேற்று நிகழ்வுகளை முன்னெடுப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் தாரிக், மாணவர் இந்தியா மாநில தலைவர் பஷீர், மற்றும் சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட MJTS மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.