ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் திரு. EVKS. இளங்கோவன் அவர்களை ஆதரித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் தொண்டர்களும், நிர்வாகிகளும் வேட்பாளர் உடன் இணைந்து பிரச்சாரப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று மாண்புமிகு தமிழக அரசின் தொழில்துறை, தமிழ் அலுவல் மொழி, தமிழ் கலாச்சாரம் மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்கள் மஜக கிழக்கு மாவட்ட அலுவலகத்திற்கு வருகை தந்து தேர்தல் பிரச்சார பணிகள் குறித்து ஆலோசனை செய்தார்.
இச்சந்திப்பின் போது மஜகவின் தேர்தல் பணிக்குழு துணை தலைவரும் மாநில துணை செயலாளருமான பாபு ஷாஹின்ஷா, மாவட்ட செயலாளர் ஷபிக் அலி, மாவட்ட பொருளாளர் பாபு, MJTS மாவட்ட செயலாளர் சபர் அலி, ITWING மாவட்ட செயலாளர் பாசித், கருங்கல் பாளையம் பகுதி செயலாளர் ஹாரிஸ் மற்றும் 40-வது வார்டு கவுன்சிலர் ரமேஷ் குமார், திமுக வார்டு செயலாளர் பாபு, மஜக சொந்தங்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.