SDPI மாவட்ட தலைவர் திருமண நிகழ்வு..! மஜக மாநில பொருளாளர் பங்கேற்பு..!!

திருவள்ளுர்.ஜூலை.10., SDPI கட்சியின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் அஹமது மீரான் அவர்களுக்கு நேற்று பாடியில் உள்ள HBM மாஹலில் திருமணம் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் மாநில பொருளாளர் #எஸ்_எஸ்_ஹாரூண்_ரசீது M.Com., அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இத்திருமண நிகழ்ச்சியில் மாநிலத் துணைச் செயலாளர் புதுமடம் அனிஸ், தலைமை செயற்குழு உறுப்பினர் மண்ணிவாக்கம் யூசுப், SDPI கட்சியின் மாநில பொதுச்செயலாளர்கள் நெல்லை நிஜாம் முஹைதீன், அ,செ.உமர் பாரூக், மஜக திருவள்ளூர் மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் பகுருதீன் அம்பத்தூர் பகுதி செயலாளர் அப்துல் ரசாக் வடசென்னை மீனவரணி அன்பு, தலைமை பி.ஆர்.ஓ. கபீர் முகப்பேர் மண்ணூர்பேட்டை மற்றும் அயப்பாக்கம் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#திருவள்ளூர்_மேற்கு_மாவட்டம்
09.07.2018