கிருஷ்ணகிரியில் மஜகவில் இணையும் இளைஞர் பட்டாளம்.!

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் தளி ஒன்றியம் பெட்டபள்ளியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் கொள்கை மற்றும் அரசியல் சேவைகளினால் ஈர்க்கப்பட்டு பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி தன்னெழுச்சியாக இளைஞர்கள் தலைமை செயற்குழு உறுப்பினர் ஓசூர் நவ்ஷாத் முன்னிலையில் தங்களை மஜக-வில் இணைத்துக் கொண்டனர்.

கடந்த இரு மாதங்களாக கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தில் மஜக-வில் இளைஞர்கள் சாரை சாரையாக இணைந்து வருகின்றனர், மேலும் விரைவில் பிரம்மாண்ட விழாவில் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி முன்னிலையில் பெருந்திரளான இளைஞர் பட்டாளம் மஜக-வில் இணையும் விழா நடைபெற உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் சையத் நவாஸ், மாநகர செயலாளர் முஹம்மத் உமர், பொருளாளர் முஹம்மத் சாகிப், மாவட்ட மருத்துவரணி செயலாளர் பாஷா, தளி ஒன்றிய செயலாளர் நியாமத் பாஷா, அன்சர், அக்பர் உட்பட நிர்வாகிகள் உடனிருந்தனர்.