கோவை:மார்ச்.15.,
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் சிங்கநல்லூர் தொகுதி வேட்பாளர் நா.கார்த்திக், அவர்களின் அறிமுக கூட்டம் கோவை சிங்காநல்லூர் பகுதியில் நடைபெற்றது.
இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் கோவை மாநகர மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அவர் பேசியதாவது, மனிதநேய ஜனநாயக கட்சி இத் தேர்தலில் போட்டியிடாமல் கொள்கையா? பதவியா? என்ற நிலை வந்த போது கொள்கை மட்டுமே முக்கியம் என்று கருதி பாசிச பாரதிய ஜனதா கட்சியை இந்த தமிழக மண்ணில் வேரூன்ற விடக்கூடாது என்பதற்காக திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவைத் தந்து தற்போது தமிழகம் முழுவதும் தீவிர தேர்தல் பணியாற்றி வருகிறது.
அதுபோல் இந்த சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதியிலும் திராவிட முன்னேற்றக் கழகத்தில் வேட்பாளர் அமோக வெற்றி பெறுவார் அதற்காக மஜக தீவிர களப்பணி ஆற்றும் என்று பேசினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர்கள் ATR.பதுருதீன், சிங்கை சுலைமான், வணிகர் சங்க மாவட்ட பொறுப்பாளர் நவ்பல் பாபு, விவசாய அணி மாவட்ட செயலாளர் அன்வர், மற்றும் நிர்வாகிகள், தோழமைக் கட்சியினர் திரளானோர் பங்கேற்றனர்.
தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#TNElection2021
#சிங்காநல்லூர்_சட்டமன்ற_தொகுதி
#கோவை_மாநகர்_மாவட்டம்
15.03.2021