சென்னை.பிப்.16., அதிமுகவின் சார்பில் முதல்வராக பொறுப்பேற்க மாண்புமிகு எடப்பாடி.பழனிச்சாமி அவர்களை மேதகு.ஆளுநர் அவர்கள் அழைப்பு விடுத்திருப்பதை மனிதநேய ஜனநாயக கட்சி வரவேற்கிறது. அவர் மாண்புமிகு அம்மா அவர்களின் திட்டங்களை செயல்படுத்தி ,தமிழக மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. தமிழகத்தின் 21வது முதல்வராக பொறுப்பேற்கும் மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு எமது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். இவண், M. தமிமுன் அன்சாரி MLA, பொதுச்செயலாளர், மனிதநேய ஜனநாயக கட்சி. 16_02_17
செய்திகள்
மஜக கொடியேற்றும் நிகழ்ச்சி : திண்டுக்கல் மாவட்டத்தில் எழுச்சி!!!
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராளிப்பட்டி , வேல்வார்கோட்டை பிரிவு, கொட்டதுரை, புது களராம்பட்டி, சக்கி நாயக்கண்பட்டி, மா.மு.கோவிலூர் பிரிவு. ஆகிய 6 கிராமத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ். ஹாருன் ரசீது M.com அவர்கள் கொடியேற்றி கட்சியின் பணிகள், குறிக்கோள், சேவை பற்றி சிறப்புரை நிகழ்த்தினார்கள். பிறகு அப் பகுதி மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார். அதிமுக, திமுக உள்ளிட்ட எந்தக் கட்சியும் நுழைய முடியாத வடமதுரை ஒன்றியத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி காலூன்றி அக்கிராம மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. மூன்று சதவிகிததிற்கும் குறைவாகவே முஸ்லிம்கள் வாழும் இந்த 6 கிராமத்தில் முழுக்க முழுக்க இந்து சகோதரர்களால் மஜக ஆரம்பிக்கப்பட்டு மொத்த நிர்வாகத்திற்கும் இந்து சகோதர்களே தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கும் சூழ்நிலையை பார்க்கும்போது, இது அனைத்து சமுதாய மக்களுக்குமான கட்சி என்பதை மீண்டும் நிரூபித்து இருக்கிறது. இந்நிகழ்ச்சியில் மாநில துணைப் பொதுச்செயலாளர் மைதின் உலவி, மாநில துணைச் செயலாளர் திண்டுக்கல் அன்சாரி, திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் ஹபிபுல்லா, மாவட்ட பொருளாளர் மரைக்காயர் சேட், திண்டுக்கல் ஒன்றிய செயலாளர் குணசேகரன், வடமதுரை ஒன்றியச் செயலாளர் முருகேசன், ஆகியோர் கலந்து கொண்டனர். திண்டுக்கள் ஒன்றிய செயளாளர்
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவரின் விபத்து உதவி தொகை ₹2 லட்சம் குடும்பத்தாரிடம் ஒப்படைப்பு…
புதுகை.பிப்14., புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மனிதநேய ஜனநாயக கட்சியின் ஒன்றிய செயலாளர் அரசர்குளம் சேக் அப்துல்லாஹ் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் சில மாதங்களுக்கு முன்பு விபத்தில் மரணமடைந்தார்கள் - இன்னாலில்லாஹி .... அவர்களுக்கான மாவட்ட ஆட்சித்தலைவரின் விபத்து உதவி தொகை இரண்டு லட்சம் ரூபாய் -க்கான காசோலையை சேக் அப்துல்லாஹ்- வின் இரண்டு பெண் பிள்ளைகளிடம் மாநில செயற்குழு உறுப்பினர் அறந்தை முபாரக் அலி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் அரசர்குளம் சேக் இஸ்மாயில் ஆகியோர் ஒப்படைத்தார்கள். இதற்காக முயற்சி எடுத்து உதவி தொகை கிடைக்க வழிவகை செய்த மனிதநேய ஜனநாயக கட்சி மாநில பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி , மாவட்ட ஆட்சித்தலைவர் கனேஷ், மஜக மாவட்ட செயலாளர் துரை முகம்மது மற்றும் அறந்தாங்கி கோட்டாச்சியர் ஆகியோருக்கு சேக் அப்துல்லாஹ்-வின் தந்தை முத்தலிப் நன்றி தெரிவித்தார். தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி (MJK IT-WING) புதுக்கோட்டை மாவட்டம். 14.02.2017
மஜக வேலுர் மாநகர நிர்வாககுழு ஆலோசனை கூட்டம்…
வேலூர்.பிப்.14., மனிதநேய ஜனநாயக கட்சியின் வேலுர் மாநகர நிர்வாககுழு ஆலோசனை கூட்டம் கடந்த 13.02.17 அன்று நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ். ஹாருன் ரசீத் M.com. அவர்கள் களந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்கள் கீழ்கண்ட தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மாணங்கள். 1.மஜக இரண்டாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு அனைத்து பகுதி, கிளை, வார்டு, மண்டலம் ஆகிய பகுதியில் கொடிகளை புதுப்பித்தல் 2. இரண்டாம் ஆண்டு துவக்க விழாவில் வேலுர் மாநகரில் குறைந்தது 60 கிளைகள் துவக்குவது. 3.வேலுர் மாநகரில் உள்ள அனைத்து பகுதிகளிளும் மக்களின் குறைகளை கேட்டரிந்து அந்த குறைகளை சரி செய்வது போன்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிகழ்வில் மஜக மாநில அவை தலைவர் Oss.நாசர் உமரி மாவட்ட செயளாளர் முஹம்மது ஜாபர் மற்றும் நகர நிர்வாகிகள் களந்து கொண்டனர். தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி (MJK IT-WING) வேலூர். 13.02.17
நாகை தொகுதி மக்களுக்கு நன்றி!
நாகை.பிப்.13., மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை நிர்வாகக் குழு எடுத்த முடிவின்படி நாகப்பட்டினம் தொகுதி மக்களின் எண்ண ஓட்டங்களை அறிய கருத்துகேட்பு நடத்தினோம். எதிர்பாராத வகையில் படிவங்கள் அனைத்தும் இரண்டு மணி நேரத்திக்குள் பூர்த்தியாகி விட்டது. எனவே 11 மணியுடன் வாக்கு பதிவை நிறைவு செய்துவிட்டோம்.தங்களின் எண்ணங்களை பதிவு செய்த வாக்காளர்களுக்கு நன்றி.இது குறித்து மஜக தலைமை நிர்வாகக் குழு பரிசிலிக்கும். நன்றி. இவண் M.தமிமுன் அன்சாரி நாகை சட்டமன்ற உறுப்பினர் 13_02_17