நெல்லை.ஆக.22., சில நாட்களுக்கு முன்பு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க நெல்லைக்கு வருகை தந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்களிடம் அம்பை சட்டமன்ற தொகுதி, சேரை ஒன்றியம் பத்தமடை பேரூர் பொதுமக்கள் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர் அதில்,
பத்தமடை பேரூர் சுமார் 20,000-க்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்டது. அங்கு மின் கட்டணம் செலுத்துவதற்க்கோ, மின்பழுது குறித்த புகார் கூறுவதற்கோ அங்கு மின்சார துறை அலுவலகம் இல்லை என்பதும் அதற்காக மக்கள் ஏழு கிலோமீட்டர் தொலைவில் சேரன்மகாதேவிக்கே செல்லவேண்டும். நேரம் மற்றும் பணவிரயத்தால் மக்கள் பெரும் சிரமத்தில் இருப்பதால் அதற்கான அலுவலகத்தை இங்கேயே ஏற்பாடு செய்து கொடுக்க கேட்டுகொள்ப்பட்டது.
அதன் அடிப்படையில் இன்று திமுக புறநகர் மாவட்ட செயலாளர் இரா.ஆவுடையப்பன் அவர்களை நெல்லை மாவட்ட மஜக செயலாளர் நெல்லை நிஜாம், கலைஇலக்கிய பேரவை அணி செயலாளர் பத்தமடை கனி உள்ளிட்ட நிர்வாகிகள் கோரிக்கை மனுவோடு சென்று சந்தித்தனர்.
மனுவை பெற்றுக்கொண்ட இரா.ஆவுடையப்பன் அவர்கள் துறைசார்ந்த அதிகாரிகளை தொடர்புகொண்டு பேசினார். பின்னர் இப்பிரச்சனை விரைவில் தீர்வுபெற முதலமைச்சர் தனி பிரிவின் கவனத்திற்கு எடுத்து செல்கிறேன் என்றும் வாக்குறுதி அளித்தார்.
மேலும் இது குறித்து விரைவில் துறை சார்ந்த அமைச்சரை நெல்லை மாவட்ட மஜக-வினர் சந்திக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#நெல்லை_மாவட்டம்
22-08-2021.