சவூதி அரேபியா தம்மாம் மண்டலத்திற்குட்பட்ட அல் ஜூபைல் மனிதநேய கலாச்சாரப் பேரவை கிளை மாதாந்திர கூட்டம் 03-03-2017 வெள்ளிக்கிழமை கிளை செயலாளர் முஹம்மது அலி தலைமையில் நடைபெற்றது. மண்டல பொருளாளர் எம்.ஹஜ் முஹம்மது அவர்கள் முன்னிலை வகித்தார். கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கிளையின் துணைச்செயலாளராக ஹஜ் முகம்மது அவர்களை நியமனம் செய்யப்பட்டது. புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது குறித்தும், இரத்தான முகாம் நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மஜக தகவல் தொழில்நுட்ப அணி #MJK_IT_WING தம்மாம் மண்டலம்
செய்திகள்
முதல்வருடன் நாகை MLA சந்திப்பு ..!
நாகை தொகுதிக்கு தேவையான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாண்புமிகு முதல்வர் அண்ணன் எடப்பாடி .கே. பழனிச்சாமி அவர்களை நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் M. தமிமுன் அன்சாரி அவர்கள் நேரில் சந்தித்து வலியுறுத்தினார் . துறைமுகம் மற்றும் மருத்துவக்கல்லூரி உள்ளிட்ட 7 முக்கிய தொகுதி கோரிக்கைகளின் பட்டியலையும் கையளித்தார் . அப்போது ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் திரு. S.P.வேலுமணி அவர்களும் உடனிருந்தார் . இக்கோரிக்கைகளை பரிசீலிப்பதாகவும் முதல்வர் , தமிமுன் அன்சாரி MLA அவர்களிடம் கூறினார் . பிறகு நிதி மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் திரு . ஜெயக்குமார் அவர்களை சந்தித்து தொகுதியில் இருக்கும் மீனவர் சமுதாய மக்களின் பல்வேறு கோரிக்கைகளையும் எடுத்துக்கூறி அவற்றை நிறைவேற்றவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார் . தகவல் : நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்
ஜித்தா மண்டல இஸ்லாமிய கலாச்சரப்பேரவை கூட்டம்
சவூதி அரேபியாவின் ரியாத் மண்டலத்தை தொடர்ந்து ஜித்தா மண்டலத்திலும் 03.03.2017 ம.ஜ.க.வின் இரண்டாம் ஆண்டு துவக்கத்தை சிறப்பிக்கும் வண்ணமாக மண்டல செயலாளர் மஸ்தான் தலைமையில், மண்டல பொருளாலர் அதிரை சேக் முண்ணிலையில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தாயகத்தில் இருந்து மாநில துனைபொதுச்செயலாளர் அண்ணண் மைதீன் உலவி அவர்கள் காணொளி மூலம் சிறப்புறை ஆற்றினார்கள். இக்கூட்டத்தில் ஜித்தா மண்டல ஆலோசராக ஆக்கூர் ரிபாய், மற்றும் மதினா நகரத்தின் அமைப்பாளராக திருமுல்லை வாயில் ஜாபர் அவர்களும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்கள். தீர்மானம்.... 1.இக்கூட்டம் தாயகத்தில் நடக்கும் நெடுவாசல் போராட்டத்திற்க்கு முழு ஆதரவு தெரிவித்துக்கொள்கிறது. 2.வரும் காலங்களில் ஜித்தா மண்டலத்தில் உறப்பினர் சேர்க்கை தீவிரப்படுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இறுதியாக துனைசெயலாளர் பங்குராஜ் அவர்கள் நன்றிவுரை கூறி கூட்டம் நிறைவு செய்யப்பட்டது.. மஜக தகவல் தொழில் நுட்ப அணி #MJK_IT_WING ஜித்தா மண்டலம்
பரமக்குடியில் மஜக இரண்டாம் ஆண்டு துவக்க நிகழ்ச்சி!
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகர் சார்பாக மஜகவின் இரண்டாம் ஆண்டு துவக்கவிழா முன்னிட்டு கொடி ஏற்றும் நிகழ்ச்சி நகர செயலாளர் எமனை சாகுல் தலைமையில் நடைபெற்றது. பரமக்குடி மேலபள்ளிவாசல் கிளை சார்பாக மேலபள்றிவாசல் அருகிலும், எமனேஸ்வரம் கிளையின் சார்பாக கான்ஷாகிப் திடல் மற்றும் திப்புசுல்தான் தெரு ஆகிய இரு இடங்களில் பிரம்மான்டமாக நம்முடைய புரட்சி கொடி பட்டொளிவீசி பறக்கவிடப்பட்டது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் அண்ணன் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது M.com அவர்கள் நம் புரட்சிகொடியை ஏற்றி சிறப்புரை ஆற்றினார்கள். இராமநாதபுரம் மாவட்செயளாளர். முஹம்மது இலியாஸ், பொருளாளர்.Mmசெய்யது, மா.து.செ. அப்துல்கபூர், மற்றும் பைசல் ரசித், பரமக்குடி பொருளாளர் அப்துல்அஜிஸ் மாணவர்இந்தியா செயளாளர் ஆசிக். எமனேஸ்வர கிளை செயளாளர். ஹபிப்ரஹ்மான் பொருளாளர் தமீம்அன்சாரி, மற்றும் மத்தியசென்னை மாவட்ட செயளாளர் முஹம்மது ஹாலித் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். தகவல் தொழில்நுட்ப அணி #MJK_IT_WING மனிதநேய ஜனநாயக கட்சி இராமநாதபுரம் மாவட்டம்
திருவாரூர் மாவட்டம் எரவாஞ்சேரி கிளை கூட்டம்…
திருவாரூர்.மார்ச்.03., கடந்த 02/03/2017 அன்று மனிதநேய ஜனநாயக கட்சி திருவாரூர் மாவட்டம் எரவாஞ்சேரி கிளை ஆலோசனை கூட்டம் முன்னால் மாவட்ட துணை செயலாளர் அபுல் கலாம் ஆசாத் அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் PMA.சீனி ஜெகபர் சாதிக் தலைமையிலும், மாவட்ட துணை செயலாளர் அத்திக்கடை லியாகத் அவர்களும் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் முகம்மது அசாருதீன் ஆகியோர் முன்னிலையில் கிளை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.. மனிதநேய ஜனநாயக கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு அப்பகுதியில் மாவட்ட செயலாளர் PMA.சீனி ஜெகபர் சாதிக் மற்றும் முன்னால் மாவட்ட துணை செயலாளர் எரவாஞ்சேரி அபுல் கலாம் ஆசாத் அவர்களும் இரண்டு புதிய கொடி கம்பத்தில் கொடி ஏற்றி சிறப்பித்தனர். மற்றும் 20 புதிய உறுப்பினர்கள் மனிதநேய ஜனநாயக கட்சியில் இணைத்தனர். தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி. (MJK IT-WING) திருவாரூர் மாவட்டம் 02/03/2017