சென்னை.ஏப்.06., கடந்த சிலநாட்களுக்கு முன் பத்திரிக்கையாளர்களை தேசவிரோதிகள் என்று கூறிய பாஜக பிரமுகர் எச்.ராஜாவை கண்டித்து மக்கள் செய்திமையம் சார்பில் பத்திரிக்கையாளர் மன்றத்தில் இன்று காலை கருத்தரங்கம் நடைபெற்றது. மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன்அன்சாரி MLA அவர்களும், காங்கிரஸ் கட்சியின்செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி, CPM கட்சியின் செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ், திராவிடர் கழகம் சார்பில் சு.குமாரதேவன், சட்டபஞ்சாயத்து இயக்க தலைவர் சிவ.இளங்கோ உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் பேசிய மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் சமுகத்தை பிளவுபடுத்தும் தீய சக்திகளுக்கு எதிராக போராட வேண்டும், என்றும் H.ராஜா போன்றவர்கள் பொருப்புணர்வோடு பேசவேண்டும் என்றும் கேட்டுகொண்டார். இந்நிகழ்வில் மஜக இணைப் பொதுச் செயலாளர் K.M. முஹம்மத் மைதின் உலவி, மன்னை செல்லசாமி, மாநில விவசாய அணி செயலாளர் நாகை முபாரக், மத்திய சென்னை மாவட்ட பொருளாளர் பிஸ்மி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தகவல்: தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. #MJK_IT_WING சென்னை. 06.4.2017
செய்திகள்
R.K.நகர் சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் மஜக பொதுச்செயலாளர்..
சென்னை.ஏப்.6., ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொருக்குப்பேட்டை 47-வது வார்டில் உள்ள அனைத்து தெருக்கள் மற்றும் பணிமனைகளிலும் மஜகவின் ஆதரவு பெற்ற அதிமுக அம்மா கட்சியின் வேட்பாளர் டி.டி.வி.தினகரன் அவர்களை ஆதரித்து பிரச்சார வாகனத்தில் திரு டி.டி.வி. தினகரன் அவர்களுடன் மஜக பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி MA,MLA (நாகை சட்டமன்ற உறுப்பினர்) மற்றும் மாநில துணை செயலாளர் திண்டுக்கல் அன்சாரி, மாநில விவசாய அணி செயளாளர் நாகை முபாரக,மாநில இளைஞர் அணி செயலாளர் ஷமிம் அஹமது ஆகியோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் ஹசிம் தலைமையில் R.K.நகர் பகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகள் இளைஞர்கள் பெண்கள் என பெருந்திரளாக கலந்து கொண்டனர் தகவல்: தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. #MJK_IT_WING R.K.நகர் சட்டமன்ற தொகுதி. 05.04.2017
செரியன் நகரில் மஜக தீவிர வாக்கு சேகரிப்பு!
R.K.நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் மனிதநேய ஜனநாயக கட்சியின் ஆதரவு பெற்ற அ.தி.மு.க (அம்மா) கட்சி வெற்றி வேட்பாளர் திரு T.T.V தினகரனை ஆதரித்து 39 வது வட்ட செரியன் நகரில் தேர்தல் பிரச்சாரம் 06-04-2017 இன்று நடைபெற்றது. பகுதி தேர்தல் பணிக்குழு தலைவரும் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளருமான அக்பர் உசேன் தலைமையில் ம.ஜ.க இளைஞர் பட்டாளம் "தொப்பி" சின்னத்திற்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனர். தகவல்: தகவல் தொழில்நுட்ப அணி மனிதநேய ஜனநாயக கட்சி #MJK_IT_WING R.K நகர் சட்டமன்ற தொகுதி. 06-04-2017
R.K.நகர் சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் மஜக…
சென்னை.ஏப்.6., ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிரப்பிரச்சாரம் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் நடைபெற்றது. இதில் நாகூர் தோட்டம் மற்றும் வ.உ.சி நகர் வார்டில் உள்ள அனைத்து தெருக்கள் மற்றும் பணிமனைகளிலும் மஜகவின் ஆதரவு பெற்ற அதிமுக (அம்மா) கட்சியின் வேட்பாளர் திரு.டி.டி.வி.தினகரன் அவர்களை ஆதரித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் வட சென்னை மாவட்ட செயலாளர் எஸ்.எ.அஸிம் தலைமையில் R.K.நகர் பகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகள் இளைஞர்கள் பெண்கள் என பெருந்திரளாக கலந்து சென்று வாக்கு சேகரித்தனர். தகவல்: தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. #MJK_IT_WING ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி 06_04_2017
திண்டுக்கல்லில் மஜக சார்பில் தண்ணீர் மற்றும் நீர்மோர் பந்தல் திறப்பு!
திண்டுக்கல்.ஏப்:05., இன்று திண்டுக்கல் நகரம் ரவுண்ரோடு 16 வார்டு பகுதியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக தண்ணீர் மற்றும் நீர்மோர் பந்தல் மாவட்ட செயலாளர் A.ஹபீபுல்லா, மாவட்ட பொருளாளர் U.மரைக்காயர் சேட் இவர்கள் ஆகியோர் தலைமையில் இன்று 05/04/2017 காலை : 11:30 மணியலவில் திறக்கப்பட்டது. மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட அணி நிர்வாகிகள், நகர நிர்வாகிகள், நகர அணி நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், ஒன்றிய அணி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். தகவல் :- தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. #MJK_IT_WING திண்டுக்கல் மாவட்டம். 05.04.2017