மார்ச்.16.,
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் சங்கரன் கோவில் தொகுதி வேட்பாளர் E.ராஜா அவர்களின் அறிமுக கூட்டம் சங்கரன்கோவில் வைஷ்ணவி மஹாலில் வைத்து நடைபெற்றது .
இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்டச் செயலாளர் M. பீர் மைதீன், அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அவர் பேசியதாவது, மனிதநேய ஜனநாயக கட்சி இத் தேர்தலில் போட்டியிடாமல் கொள்கையா? பதவியா? என்ற நிலை வந்த போது கொள்கை மட்டுமே முக்கியம் என்று கருதி பாசிச பாரதிய ஜனதா கட்சியை இந்த தமிழக மண்ணில் வேரூன்ற விடக்கூடாது என்பதற்காக திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவைத் தந்து தற்போது தமிழகம் முழுவதும் தீவிர தேர்தல் பணியாற்றி வருகிறது.
அதுபோல் இந்த சங்கரன் கோவில் சட்டமன்றத் தொகுதியிலும் திராவிட முன்னேற்றக் கழகத்தில் வேட்பாளர் E.ராஜா வெற்றி பெறுவார் அதற்காக மஜக தீவிர களப்பணி ஆற்றும் என்று பேசினார்.
இக்கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் MSS. முஹம்மது இப்ராஹிம், மாவட்ட துணை செயலாளர்கள் பொன்னானி அபுதாஹிர், வாவை இணையாதுல்லா, மனித உரிமை அணி மாவட்ட செயலாளர் சங்கை பீர் மைதீன், நகரச் செயலாளர் இத்ரீஸ் , நகரப் பொருளாளர் இஸ்மாயில், நகரத் துணைச் செயலாளர் சேக் மைதீன், மற்றும் தர்வீஸ் மைதீன் , திவான் மைதீன், காஜா , மற்றும் நிர்வாகிகள், தோழமைக் கட்சியினர் திரளானோர் பங்கேற்றனர்.
தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#TNElection2021
#சங்கரன்_கோவில்_சட்டமன்ற_தொகுதி
#தென்காசி_மாவட்டம்
15.03.2021