You are here

எச்.ராஜாவை கண்டித்து கருத்தரங்கம்..! மஜக பொது செயலாளர் பங்கேற்பு…

image

image

image

சென்னை.ஏப்.06., கடந்த சிலநாட்களுக்கு முன் பத்திரிக்கையாளர்களை தேசவிரோதிகள் என்று கூறிய பாஜக பிரமுகர் எச்.ராஜாவை கண்டித்து மக்கள் செய்திமையம் சார்பில் பத்திரிக்கையாளர் மன்றத்தில் இன்று காலை கருத்தரங்கம் நடைபெற்றது.

மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன்அன்சாரி MLA அவர்களும், காங்கிரஸ் கட்சியின்செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி, CPM கட்சியின் செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ், திராவிடர் கழகம் சார்பில் சு.குமாரதேவன்,
சட்டபஞ்சாயத்து இயக்க தலைவர் சிவ.இளங்கோ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில் பேசிய மஜக பொதுச்செயலாளர்  M.தமிமுன் அன்சாரி MLA  அவர்கள் சமுகத்தை பிளவுபடுத்தும் தீய சக்திகளுக்கு எதிராக போராட வேண்டும், என்றும் H.ராஜா போன்றவர்கள் பொருப்புணர்வோடு பேசவேண்டும் என்றும் கேட்டுகொண்டார்.

இந்நிகழ்வில் மஜக இணைப் பொதுச் செயலாளர் K.M. முஹம்மத் மைதின் உலவி, மன்னை செல்லசாமி, மாநில விவசாய அணி செயலாளர் நாகை முபாரக், மத்திய சென்னை மாவட்ட பொருளாளர் பிஸ்மி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தகவல்:
தகவல் தொழில்நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி.
#MJK_IT_WING
சென்னை.
06.4.2017

Top