(ஜூன் 15 அன்று சட்டசபையில் மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பள்ளிக்கல்வி மானிய கோரிக்கையில் பேசிய உரையின் நிறைவுப்பகுதி ) மாண்புமிகு பேரவைத்தலைவர் அவர்களே ...! பள்ளிக்கல்வித்துறையில் பாடத்திட்டங்களை மேம்படுத்தும் திட்டங்களை முன்னெடுத்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது. CBSE – பாடத்திட்டம் மட்டுமே சிறந்ததாக கருதி , அதைமட்டுமே பின்பற்றிவிடாமல் உலகம் முழுக்க மாறிவரும் நவீனகல்வி முறைகளையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்விஷயத்தில் சிங்கப்பூரின் கல்வித்துறையை தொடர்புக்கொண்டு அதில் உள்ள நல்ல முன்மாதிரிகளை நமது பாடத்திட்டங்களில் கொண்டுவர முயற்சிக்கலாம் . மேலும் கல்வி என்பது பண்பாட்டின் கூறு என்பதால், நமது தமிழ்நாட்டின் கலாச்சாரங்களை, பாரம்பரியங்களை இழக்காமல் பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். குழந்தைகளின் வயதுக்கும், அவர்களின் புரிதலுக்கும் ஏற்றார் போல, புத்தக சுமைகளை குறைத்து செயல்வழி கற்றலுக்கான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். மேலும் 6 முதல் 10 வகுப்பு வரை உடல் ஆரோக்கியத்தையும், ஆரோக்கியமான உணவு வழக்கத்தின் அவசியத்தையும் உணர்த்தும் வகையில் செயல் வடிவபாடங்கள் உருவாக்க வேண்டும். சீனாவில் ஆரோக்கியமான முறையில் வளரும் தலைமுறையினர் இப்படித்தான் உருவாக்கப்படுகிறார்கள். அதனால் அங்கு இளம் வயது பிள்ளைகள் வலிமையான உடல்கட்டோடும், நோயின்றியும் உணர்கிறார்கள். இதை
செய்திகள்
நாகை ஜெயந்தி நகரில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து தார் சாலை அமைக்கப்பட்டது…
நாகை. ஜூலை.01., நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் M. தமிமுன் அன்சாரி அவர்களின் தொகுதிக்குட்பட்ட சிக்கல் ஊராட்சி ஜெயந்தி நகரில் நாகை சட்டமனற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி 2016-2017 இல் இருந்து ரூ.5,00,000 (ஐந்து இலட்சம்) சிலவில் தார் சாலை அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது. தகவல்; நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம். 30.06.2017
ஆளியூர், பொரவச்சேரி குளங்களை பார்வையிட்ட நாகை சட்டமன்ற உறுப்பினர்…!
நாகை.ஜூன்.30.,நாகை தொகுதிக்குட்பட்ட ஆழியூருக்கு இன்று M. தமிமுன் அன்சாரி MLA அவர்கள் வருகை தந்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அங்கு பள்ளிவாசலுக்கு எதிரே உள்ள குளத்தை சீரமைத்து தரும்படியும், சாலைகளை மேம்படுத்தி தரும்படியும் பொதுமக்கள் கொடுத்த கோரிக்கைகளை மீது நடவடிக்கை எடுப்பதாக கூறினார். பிறகு பொரவச்சேரி வள்ளலார் குளம் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டார். 9 ஏக்கர் பரப்பிலுள்ள அக்குளத்தை காவேரி.தனபால் அவர்கள் முன்னின்று தூர்வாரி வருகிறார். அப்பணியை பார்வையிட்டு, காவேரி.தனபாலுக்கு பாராட்டுக்களை கூறினார். இக்குளத்திற்கு படிக்கட்டுகளை அமைத்து தருவதாகவும் கூறினார். இக்குளம் தண்ணீர் நிரம்பினால், பொரவச்சேரி மற்றும் மஞ்சக்கொல்லை பகுதி மக்கள் குடிநீர் மற்றும் நிலத்தடி நீர் வசதிகளை பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தகவல்; நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம். 30.06.2017
ராமநாதபுரத்தில் பாஜக நிர்வாகிகள் வன்முறை தூண்டும் விதமாக பேச்சு…மஜக உள்ளிட்ட கட்சிகள் காவல்துறையில் புகார்…
ராமநாதபுரம்.ஜூன்.29., நேற்று ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது அதில் பாஜக நிர்வாகிகள் சிலர் பேசும் பொழுது, இஸ்லாமியர்கள் மற்றும் பிற மதத்தவர்கள் மீது பொய்யான பல குற்றச்சாட்டுகைளையும், இந்திய இறையாண்மை, ஜனநாயகத்துக்கு எதிரான விஷம கருத்துக்களையும் பேசினர். தொடர்ந்து விசமக் கருத்துகளை வெளியிட்டு வரும் பாஜக நிர்வாகிகள் மீது மனிதநேய ஜனநாயக கட்சி, விசிக, முஸ்லிம் லீக், தமுமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் சார்பாக தனித்தனியாக காவல்துறையிடம் புகார் கொடுக்கப்பட்டது. மஜக சார்பில் இன்று மாவட்ட செயலாளர் இலியாஸ் தலைமையில் ராமநாதபுரம் B2 பஜார் காவல்நிலையம் சென்று மாவட்ட துணைச் செயலாளர் அப்துல் நசீர் அவர்களின் பெயரில் மனு கொடுக்கப்பட்டு பாஜக நிர்வாகிகள் மீது புகார் கொடுக்கப்பட்டு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்த நிகழ்வின் போது மாவட்ட துணைச் செயலாளர்கள் சோனாப்பூர் அஜ்மல் மற்றும் பரமக்குடி பைசல் ஆகியோர் உடனிருந்தனர். தகவல்; தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. ராமநாதபுரம் மாவட்டம். 29.06.2017
உடுப்பி பெஜாவர் மடமும் , நாகூர் தர்ஹாவும் !
(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் சமூக இணையதள பதிவு) வரலாற்று இந்தியாவின் மதச்சார்பின்மையை கட்டிக்காக்கும் சமூக மையங்களாக ஆதின மடங்களும் , தர்ஹாக்களும் திகழ்கின்றன . ஆதின மடங்களுக்கு மன்னர் ஔரங்கசீப் ஏராளமான இடங்களை தானமாக வழங்கியது குறித்து திரு. மதுரை ஆதினம் பல கூட்டங்களில் பெருமை பொங்க பேசியுள்ளார் . தீரன் சின்னமலையின் நட்பு காரணமாக கொங்கு மண்டலத்தில் பல கோயில்களுக்கு திப்பு சுல்தான் தானம் வழங்கியதை அண்ணன் தனியரசு MLA அவர்கள் என்னிடம் கூறினார் . நாகூர் தர்ஹாவின் உருவாக்கத்தில் தஞ்சாவூரை ஆண்ட மராட்டிய மன்னர்களுக்கும், நாயக்கர் மன்னர்களுக்கும் பெரும் பங்கு இருப்பதை ஆவணங்களும், நிகழ்கால நடைமுறைகளும் சாட்சி கூறுகின்றன . இப்படி நிறைய கூறலாம். தமிழகத்தில் முஸ்லிம்களில் ஒரு சாரார் கொண்டாடும் நாகூர் தர்ஹா, முத்துப்பேட்டை போன்ற தர்ஹாக்களில் இந்துக்கள் வருகை தருவது தொடர்ச்சியாக நடக்கிறது. நமது மண்ணின் கலாச்சார ஒற்றுமையாக பார்க்கப்படுகிறது. தர்ஹா வழிபாட்டை எதிர்க்கும் முஸ்லிம்கள் கூட அங்கு நிலவும் சமூக இணக்கத்தை விமர்சிப்பதில்லை . இது போலத்தான் இஃப்தார் நோன்பு துறப்பு நிகழ்ச்சிகளும் , பல மதத்தவர்களும் ஒன்று