கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்த தொழிலாளர்களுக்கு!!அரசின் நிவாரண உதவியை பெற்றுக்கொடுக்கும் முயற்சியில் கோவை மஜகவினர்!!


கோவை: ஆக.20.,

கொரோனாவால் வேலை இழந்த தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகளுக்கு அரசின் சார்பில் வழங்கப்படும் நிவாரண உதவிகளை பெற்றுக் கொடுக்க கோவை மாநகர் மாவட்ட மஜக வினர் முன் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

அதைத் தொடர்ந்து கோவை மாநகராட்சி அதிகாரிகள் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடத்தினர்.

இம்முகாம் மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், அவர்களின் மேற்பார்வையில் வணிகர் சங்க மாவட்ட துணை செயலாளர் ஹாரூன், அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள், மற்றும் வியாபாரிகளுக்கு, அரசின் நிவாரண கடன் தொகை வழங்க ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு விண்ணப்பம் அனுப்பப்பட்டது,
அதைத் தொடர்ந்து அவர்களுக்கு அரசின் சார்பில் உரிய அடையாள அட்டையுடன் நிவாரண கடன் தொகை வழங்கப்படும்.

இதன் மூலம் கொரோனாவால் வேலை இழந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பயன் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மஜக வினரின் இம்முயற்சிக்கு நடைபாதை வியாபாரிகளும், தொழிலாளர்களும் பெரும் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் M.H.அப்பாஸ், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#கோவை_மாநகர்_மாவட்டம்
19.08.2020