சென்னை.நவ.10., தமிழகத்தில் செயல்பட்டு வந்த மறுமலர்ச்சி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் என்கிற அமைப்பு அதன் தலைவர் சீனி முஹம்மது தலைமையில் நூற்றுக்கணக்கான தொண்டர்களுடன் நேற்று 09.11.2017 மாலை சென்னை மண்ணடியில் உள்ள ஆயிஷா மஹாலில் மனிதநேய ஜனநாயக கட்சியுடன் இணைந்தது. மிக சிறப்பாக நடைபெற்ற இவ்விழாவில் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது M.Com அவர்களின் முன்னிலையில் மதமுமுக மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் மஜகவில் இணைந்தனர். மறுமலர்ச்சி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் தலைவர் சீனி முஹம்மது அவர்கள் உரையில் நாட்டில் நடக்கும் பாசிச அரசியல் பற்றியும், இனி வரவிருக்கும் டிசம்பர் 6 இரயில் முற்றுகை பற்றியும் ஆக்ரோஷத்துடன் வெளிப்படுத்தினார். மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் மஜகவின் தொடர்ச்சியாக பல அமைப்பினர் சேர்ந்து வருவதையும், நவம்பர் புரட்சி என்ற தலைப்பில் தொடர்ச்சியாக புளியங்குடி செய்யது அலி, தாரிக் வரிசையில் தற்போது சீனி முஹம்மது போன்ற இன்னும் பல தலைவர்கள் விரைவில் இணைய உள்ளதாக கூறினார். இவ்விழாவினை மாநில துணைச் செயலாளர் ஷமிம் அகமது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில செயலாளர் என்.ஏ.தைமிய்யா கட்சியின்
செய்திகள்
குவைத் மண்டலம் MKP சல்வா கிளை நடத்தும் அரசியல் விழிப்புணர்வு கூட்டம்…!
குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவை சல்வா கிளை நடத்தும் அரசியல் விழிப்புணர்வு கூட்டம் இன்று 10/11/2017 வெள்ளிக்கிழமை 1 மணிக்கு (ஜும்ஆவுக்கு பின்) கத்தா 10 மஸ்ஜித் வளாகம் - சல்வாவில் நடைபெற உள்ளது மனிதநேய சொந்தங்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறது. அழைப்பின் மகிழ்வில்... #MKP_மனிதநேய_கலாச்சார_பேரவை (சல்வா கிளை) #மனிதநேய_ஜனநாயக_கட்சி #MJK_IT_WING #குவைத்_மண்டலம். 55278478-60338005-65510446.
மஜக வேலூர் விருதம்பட்டு கிளை நிர்வாகிகளுடன் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்…
வேலூர்.நவ.09., வேலூர் மாநகர விருதம்பட்டு 15வது வார்டு மஜக நிர்வாகிகளை, கிளை அலுவலகத்தில் மாவட்ட அமைப்புக்குழு பொறுப்பாளர்கள் முஹம்மத் ஜாபர், முஹம்மத் வசீம் உட்பட மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் ரபீக் ரப்பானி மற்றும் முன்னாள் மாநகர செயலாளர் O.S.T.அஸ்கர் ஆகியோர் நேற்று கிளை நிர்வாகிகளை சந்தித்து கட்சியின் வளர்ச்சி குறித்து ஆலோசனை நடத்தினர். இதில் கிளை செயலாளர் முஹம்மத் ஆசிப், கிளை பொருளாளர் முஹம்மத் இஸ்மாயில், கிளை துணைச் செயலாளர் அஸ்கர் அலி மற்றும் பலர் கலந்து கொண்டனர். உடன் சகோ.மூஸா, சகோ,சலீம் ஆகியோர் உடனிருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #வேலூர்_கிழக்கு_மாவட்டம். 08.11.2017
மதரஸாவை மூட முயற்சி…! தடுத்து நிறுத்திய கூட்டமைப்பினர்..!!
திருவள்ளூர்.நவ.09., திருவள்ளூர் மேற்கு மாவட்டம் ஆவடியில் மஸ்ஜிதே முகம்மதியா பள்ளிவாசலுக்கு சொந்தமான 13 சென்ட் நிலத்தில் பெண்கள் அரபு பாடசாலை நடந்து வருகிறது. இதில் சுமார் 200 பெண்கள் மதரசவில் ஓதி வருகின்றனர். இந்த இடம் ஆவடி நகராட்சிக்கு சொந்தமானது எனக்கூறி மதரசவை அகற்ற வேண்டும் என நகராட்சி ஆணையர் நோட்டிஸ் அனுப்பியதோடு, அப்புறப்படுத்தும் பணியையும் மேற்கொள்ள முயற்ச்சி செய்தார். இதை கண்டித்து ஆவடி அணைத்து ஜமாத் கூட்டமைப்புகள் சார்பாக ஆவடி தாசில்தார் மற்றும் நகராட்சி ஆணையரை சந்தித்து பள்ளிவாசல் தொடர்பான ஆவனங்களை காண்பித்து மதரசவை அப்புறப்படுத்துவதை நிறுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. ஜமாத் கூட்டமைப்பின் கோரிக்கையை ஏற்று மதரஸாவை அப்புறப்படுத்தும் பணி தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இதில் பல்வேறு முஸ்லீம் அமைப்புகள் கலந்துகொண்டு தங்கள் எதிர்ப்பை பதிவுசெயதனர். மனிதநேய ஜநாயக கட்சி சார்பில் திருவள்ளூர் மேற்கு மாவட்டம் செயலாளர் அக்பர், மாவட்ட பொருளாளர் இஸ்மாயில் மற்றும் ஆவடி நகர செயலாளர் சாகுல், நகர பொருளாளர் நாகூர் மீரான் உள்ளிட்ட நகர நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #திருவள்ளூர்_மேற்கு_மாவட்டம்
மஜக முயற்சியால் சாலைகள் சீரமைப்பு..!
வேலூர்.நவ.09., வேலூர் மாநகரம் 53 வார்டு R.N.பாளையம் புதுதெரு, ஜானிபூந்தோட்டம், ஜன்டாதெரு, சின்னையா லேவுட் ஆகிய பகுதிகளில் சாலைகள் குன்டும் குழியுமாக மக்கள் நடந்து செல்வதற்க்கும் சிரமாக இருந்ததை அடுத்து மனிதநேய ஜனநாயக கட்சி 53 வது வார்டு கிளையின் சார்பாக மாநகர பொறியாளர் சுப்பிரமணியம் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக உதவி பொறியாளர் செல்வராஜ் நேரில் ஆய்வு செய்து படிப்படியாக சீர்செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்தார். அதை தொடர்ந்து முதல் கட்டமாக சமத் பள்ளிவாசல் அருகில் உள்ள சாலைகள் சரிசெய்யும் பணி தொடங்கியது. தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #வேலூர்_கிழக்கு_மாவட்டம். 08.11.2017