திருவள்ளூர்.நவ.09., திருவள்ளூர் மேற்கு மாவட்டம் ஆவடியில் மஸ்ஜிதே முகம்மதியா பள்ளிவாசலுக்கு சொந்தமான 13 சென்ட் நிலத்தில் பெண்கள் அரபு பாடசாலை நடந்து வருகிறது.
இதில் சுமார் 200 பெண்கள் மதரசவில் ஓதி வருகின்றனர். இந்த இடம் ஆவடி நகராட்சிக்கு சொந்தமானது எனக்கூறி மதரசவை அகற்ற வேண்டும் என நகராட்சி ஆணையர் நோட்டிஸ் அனுப்பியதோடு, அப்புறப்படுத்தும் பணியையும் மேற்கொள்ள முயற்ச்சி செய்தார்.
இதை கண்டித்து ஆவடி அணைத்து ஜமாத் கூட்டமைப்புகள் சார்பாக ஆவடி தாசில்தார் மற்றும் நகராட்சி ஆணையரை சந்தித்து பள்ளிவாசல் தொடர்பான ஆவனங்களை காண்பித்து மதரசவை அப்புறப்படுத்துவதை நிறுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
ஜமாத் கூட்டமைப்பின் கோரிக்கையை ஏற்று மதரஸாவை அப்புறப்படுத்தும் பணி தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.
இதில் பல்வேறு முஸ்லீம் அமைப்புகள் கலந்துகொண்டு தங்கள் எதிர்ப்பை பதிவுசெயதனர்.
மனிதநேய ஜநாயக கட்சி சார்பில் திருவள்ளூர் மேற்கு மாவட்டம் செயலாளர் அக்பர், மாவட்ட பொருளாளர் இஸ்மாயில் மற்றும் ஆவடி நகர செயலாளர் சாகுல், நகர பொருளாளர் நாகூர் மீரான் உள்ளிட்ட நகர நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#திருவள்ளூர்_மேற்கு_மாவட்டம்