கோவை.நவம்பர்.14.,நேற்று கோவை மாவட்ட மறுலர்ச்சி தமுமுக, பகுதி, கிளை நிர்வாகிகள் மஜக மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ் அவர்கள் முன்னிலையில் மஜகவில் இணைந்தனர். இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் ATR.பதுருதீன், மாநில செயற்குழு உறுப்பினர் ஷாஜகான், மாவட்ட துணைச்செயலாளர்கள் சிங்கை சுலைமான், ரபீக், ABT.பாருக், அணி செயலாளர்கள் பைசல், செய்யது இப்ராஹீம், சம்சுதீன் மற்றும் அனைத்து பகுதி, கிளை, நிர்வாகிகள் உடனிருந்தனர். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவை_மாநகர்_மாவட்டம் 14/11/2017
செய்திகள்
டிச6 வேலூர் தலைமை தபால் நிலைய முற்றுகைப்போர்..!
வேலூர்.நவ.13., வேலூர் கிழக்கு மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் அவசர ஆலோசனைக்கூட்டம் கடந்த (09.11.2017) அன்று மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட அமைப்புக்குழு தலைவர் அப்சர் சையத் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வருகின்ற டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு தினத்தன்று வேலூர் தலைமை தபால் நிலையைத்தை முற்றுகையிட வேண்டும் என ஏக மனதோடு தீர்மானிக்கப்பட்டது. முதற்கட்ட பணியாக மக்களை அழைப்பதற்கான சுவர் விளம்பரங்கள், துண்டு பிரசுரங்கள் வினியோகம், அழைப்பு பதாகைகள் வடிவமைத்தல், தனிநபர் சந்திப்புகள் ஆகியவை மேற்கொள்ள வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது. இதில் மாவட்ட அமைப்புக்குழு பொறுப்பாளர்கள் முஹம்மத் ஜாபர், முஹம்மத் வசீம், முஹம்மத் சலீம், முஹம்மத் யாசீன், ஜாகிர் உசேன், சையத் உசேன் மற்றும் மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் ரபீக் ரப்பானி ஆகியோர் கலந்து கொண்டனர். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #வேலூர்_கிழக்கு_மாவட்டம் 13.11.2017
நாகை விவசாயிகளை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார் தமிமுன் அன்சாரி MLA!
(தொகுப்பு 1) இன்று (13.11.17) நாகை தொகுதியில் திருமருகல் ஒன்றியத்தில் உள்ள கிராமங்களுக்கு சென்று சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி பொதுமக்களிடம் மழை-வெள்ள பாதிப்புகள் குறித்தும், இதர குறைகள் குறித்தும் விசாரித்து அறிந்தார். நரிமணத்தில் வயலில் இறங்கி அங்கு வேலை செய்யும் விவசாய கூலி வேலை செய்யும் பெண்களிடம் அவர்களின் தேவைகளை விசாரித்தார். பயீர் காப்பீட்டுத் தொகையை விரைவில் பெற்று தருமாறும், விவசாய தொழிலாளர்களுக்கும் இழப்பீடுகள் கிடைக்க ஆவணம் செய்யுமாறும், மழை கால பாதிப்புகளுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுக்குமாறும் வைத்த கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு எடுத்து செல்வதாக MLA கூறினார். அதுபோல குத்தாலம் அருகே விவசாய பெண்களை சந்தித்து, அவர்களின் குடிநீர் தேவைகளை விரைந்து நிறைவேற்றி தருவதாகவும் கூறினார். அதுபோல எரவாஞ்சேரிக்கும் சென்று விவசாயிகளை சந்தித்து குறைகளை கேட்டு அதன் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இச்சந்திப்பில் MLA அவர்களுடன் வருவாய்த்துறை அதிகாரிகள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கலையரசன், நாகை முபாரக், திட்டசேரி செய்யது ரியாசுதீன், ஏனங்குடி யூசுப்தீன், பிஸ்மி யூசுப், திருநாவுக்கரசு, ஆறுமுகபாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர். தகவல்; #நாகை_சட்டமன்ற_உறுப்பினர்_அலுவலகம். 13.11.17

சாக்கடைகளை தூர் வாரி மேல்தளம் அமைக்கக்கோரிக்கை..! கோவை மாவட்ட ஆட்சியரிடம் மஜகவினர் மனு..!!
கோவை.நவ.13.,கோவை மாநகராட்சி 86வது வார்டு செல்வபுரம் கல்லாமேடு பகுதியில் சாக்கடை மேல் தளங்கள் உடைந்து பாம்புகள் வருவதாகவும் ஒரு ஆண்டிற்கும் மேலாகியும் நடவடிக்கை எடுக்கவில்லை என சில நாட்களுக்கு முன் சமூக வலை தளங்களில் செய்தி வந்தது. அதை தொடர்ந்து மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) நிர்வாகிகள் அந்த பகுதியை பார்வையிட்டு அங்குள்ள பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். அதன் தொடர்ச்சியாக இன்று 86வது வார்டு செயலாளர் அரபாத் அவர்களின் தலைமையில் தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் சம்சுதீன், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் செய்யது இப்ராஹீம், 77வார்டு செயலாளர் இப்ராஹிம், துணைசெயலாளர் அலி, இப்ராஹீம், 78 வது வார்டு நிர்வாகிகள் சுபேர், இத்ரீஸ் ஆகியோர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து சாக்கடைகளை தூர்வாரி மேல் தளங்கள் அமைக்கக்கோரி மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட மாவட்டஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்! தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவை_மாநகர்_மாவட்டம் 13.11.17