டிச6 வேலூர் தலைமை தபால் நிலைய முற்றுகைப்போர்..!

image

வேலூர்.நவ.13., வேலூர் கிழக்கு மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் அவசர ஆலோசனைக்கூட்டம் கடந்த (09.11.2017) அன்று மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட அமைப்புக்குழு தலைவர் அப்சர் சையத் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் வருகின்ற டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு தினத்தன்று வேலூர் தலைமை தபால் நிலையைத்தை முற்றுகையிட வேண்டும் என ஏக மனதோடு தீர்மானிக்கப்பட்டது.

முதற்கட்ட பணியாக மக்களை அழைப்பதற்கான சுவர் விளம்பரங்கள், துண்டு பிரசுரங்கள் வினியோகம், அழைப்பு பதாகைகள் வடிவமைத்தல்,  தனிநபர் சந்திப்புகள் ஆகியவை மேற்கொள்ள வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது.

இதில் மாவட்ட அமைப்புக்குழு பொறுப்பாளர்கள் முஹம்மத் ஜாபர், முஹம்மத் வசீம், முஹம்மத் சலீம், முஹம்மத் யாசீன், ஜாகிர் உசேன், சையத் உசேன் மற்றும் மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் ரபீக் ரப்பானி ஆகியோர் கலந்து கொண்டனர்.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#வேலூர்_கிழக்கு_மாவட்டம்
13.11.2017