தொண்டி. நவ.25. ,நேற்று முன்தினம் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள தமோதரப்பட்டினம் ECR சாலையில் நேற்று முன்தினம் ஏற்பட்ட சலைவிபத்தில் கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த மூன்று பெண்கள் மற்றும் ஒரு ஆண் உட்பட ஒரே குடும்பத்தினர் 4பேர் சமபவ இடத்திலே மரணமடைந்தனர். தகவல் அறிந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் தொண்டி நிர்வாகிகள் சமபவ இடத்திற்கு சென்று அங்கிருந்து மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதற்கிடையில் நால்வர் உடலும் திருவாடானை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது. உடனே தமிமுன் அன்சாரி அவர்கள் அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் சேது கருணாஸ் MLA அவர்களுக்கு தொடர்புகொண்டு விஷயத்தை எடுத்து கூறி பிரேத பரிசோதனையை விரைவாக நடத்திட ஆவணம் செய்ய வலியுறுத்தினார்கள். அதன்பெரில் கருணாஸ் அவர்கள் அன்று இரவே திருவடனை அரசு மருத்துவமனை நிர்வாகம் மற்றும் DSP அவர்களை தொடர்புகொண்டு விரைவாக முடித்துக்கோடுக்க வலியுறுத்தினார்கள். நேற்று வெள்ளிக்கிழமை காலை மஜக மாநில நிர்வாகிகள் மண்டலம் S. M. ஜெய்னுலாப் தீன் மற்றும் தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் கோட்டைப்பட்டினம் A.M.ஹாரிஸ் ஆகியோருடன் புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட துணை செயலாளர் அரசை
செய்திகள்
முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் MLA மஜக திண்டுக்கல் மாவட்ட செயலாளர் சந்திப்பு..!
திண்டுக்கல்.நவ.25.,நேற்று திண்டுக்கல் மாவட்டத்திற்க்கு வருகைபுரிந்த முக்குலத்தோர் புலிப்பபடை தலைவர் கருணாஸ் தேவர் MLA அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் A.ஹபிபுல்லா அவர்கள் மரியாதை நிபந்தமாக சந்தித்தார். இச்சந்திப்பில் எதிர்வரும் டிசம்பர் 6 ஆம் தேதி நடைபெறவிருக்கும் இரயில் நிலைய முற்றுகை போராட்டம் சம்மந்தமான அழைப்பு கொடுத்துவிட்டு பேசுகையில் வழக்கம் போல் மறியல் செய்துவிட்டால் மட்டும் போதாது அனைத்து சமுக மக்களும் நாம் நடத்தும் போராட்டத்தின் அவசியம் உணரும் வகையில் இருக்க வேண்டும் என கருணாஸ் அவர்கள் கூறினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணைச்செயலாளர் R.உமர் அலி, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் M.அனஸ் முஸ்தபா, முன்னால் நகர நிர்வாகிகள் சாகுல், சோட்டா ஷேக், ரவுண்ரோடு ஆசிக் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #திண்டுக்கல்_மாவட்டம். 25/11/2017.
தொண்டியில் எழுச்சி பெற்ற மஜக..!
இராமநாதபுரம்.நவ.25., மனிதநேய ஜனநாயக கட்சி இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பேரூர் கிளை நிர்வாக சீரமைப்பு கூட்டம் நேற்று மதியம் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சி மண்டலம் S.M.ஜெய்னுலாபுதீன் தலைமை தலைமையில் , மாவட்ட செயலாளர் முஹம்மது இலியாஸ் முன்னிலையில் நடைப்பெற்றது. இதில் தொண்டி பேரூரின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு தலைமையின் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டது. கூட்டத்தில் 40 க்கும் மேற்ப்பட்ட மஜக உறுப்பினர்கள் கலந்துக்கொண்டார்கள். இறுதியாக பரமக்குடி நகர செயலாளர் எமனை சாகுல் நன்றியுரை கூறினார். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #இராமநாதபுரம்_மாவட்டம். 25.11.2017
முன்னாள் நாகூர் நகர தமுமுக நிர்வாகி மற்றும் பலர் மஜகவில் இணைந்தனர்!
நாகை. நவ.25., நாகூரில் நேற்று (24.11.17) மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் முன்னிலையில், நாகூர் நகர முன்னாள் தமுமுக நிர்வாகி மொய்தீன் அப்துல் காதர், கோபால், செய்யது இப்ராஹிம், தமிம் அன்சாரி, ரஜ்வி, ரியாஸ் ஆகியோர் தங்களை மஜகவில் இணைத்துக் கொண்டனர். இந் நிகழ்வில் மாநில விவசாயிகள் அணி செயலாளர் நாகை-முபாரக், மாவட்ட துணை செயலாளர் ஹமீது ஜெகபர், மாவட்ட மனிதநேய ஜனநாயக தொழில் சங்க செயலாளர் அல்லாபிச்சை, IKP புருனை மண்டல செயலாளர் தாஹா மரைக்காயர், நகர செயலாளர் இஸ்மாயில், பொருளாளர் இப்ராஹிம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJK_IT_WING. #நாகை_தெற்கு_மாவட்டம்.
மஜக பொள்ளாச்சி நகரம் 24 வது வார்டு செயற்குழு கூட்டம்!
கோவை.நவ.25., மனிதநேய ஜனநாயக கட்சி பொள்ளாச்சி நகரம் 24 வது வார்டு செயற்குழு கூட்டம் வார்டு செயலாளர் ஷாஜிதீன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நகர செயலாளர் ராஜா ஜெமீஷா துணைச்செயலாளர்கள் முகமது உசேன், சாகுல் அமீது, அப்துல்கனி, அப்பாஸ், தொழிற்சங்க செயலாளர் சலீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 24 வது வார்டு நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பொள்ளாச்சி நகரம் 21 வது வார்டு தமுமுக, மமக கிளை தலைவர் அப்துல் காதர் ஜெய்லானி அவர்கள் தன்னை மஜகவில் இணைத்துக்கொண்டார். இக்கூட்டத்தில் கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன. 1.வருகின்ற டிசம்பர் 6 இரயில் நிலைய முற்றுகை போராட்டத்திற்கு அதிகமான மக்களை கலந்து கொள்ளச்செய்வது என முடிவுசெய்யப்பட்டது. 2.விரைவில் 24 வது வார்டு கிளை அலுவலக திறப்பு விழா நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.. தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவை_மாவட்டம் 24.11.17