தொண்டி அருகே சாலைவிபத்து..! 4பேர் சம்பவ இடத்தில் மரணம்..!! துரித நடவடிக்கை முயற்சியில் தமிமுன் அன்சாரி MLA மற்றும் கருணாஸ் MLA..!!!

image

image

image

தொண்டி. நவ.25. ,நேற்று முன்தினம் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள தமோதரப்பட்டினம் ECR சாலையில் நேற்று முன்தினம் ஏற்பட்ட  சலைவிபத்தில் கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த மூன்று பெண்கள் மற்றும் ஒரு ஆண் உட்பட ஒரே குடும்பத்தினர்  4பேர் சமபவ இடத்திலே  மரணமடைந்தனர்.

தகவல் அறிந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் தொண்டி நிர்வாகிகள் சமபவ இடத்திற்கு சென்று அங்கிருந்து மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதற்கிடையில் நால்வர் உடலும் திருவாடானை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது.

உடனே தமிமுன் அன்சாரி அவர்கள் அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் சேது கருணாஸ் MLA அவர்களுக்கு தொடர்புகொண்டு விஷயத்தை எடுத்து கூறி பிரேத பரிசோதனையை விரைவாக நடத்திட ஆவணம் செய்ய வலியுறுத்தினார்கள்.

அதன்பெரில் கருணாஸ் அவர்கள் அன்று இரவே திருவடனை அரசு மருத்துவமனை நிர்வாகம் மற்றும் DSP அவர்களை தொடர்புகொண்டு விரைவாக முடித்துக்கோடுக்க வலியுறுத்தினார்கள்.

நேற்று வெள்ளிக்கிழமை காலை மஜக மாநில நிர்வாகிகள் மண்டலம் S. M. ஜெய்னுலாப் தீன் மற்றும் தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் கோட்டைப்பட்டினம் A.M.ஹாரிஸ் ஆகியோருடன் புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட துணை செயலாளர் அரசை செய்யது அபுதாஹிர் மற்றும் தொண்டி நகர நிர்வாகி சீனி முகம்மது ஆகியோர் திருவாடானை அரசு மருத்துவமனைக்கு சென்றனர்.

மருத்துவமனைக்கு வந்த DSP அவர்களிடம் விபரங்களை கேட்டறிந்து அங்கிருந்து கருணாஸ் MLA அவர்களுக்கு தொலைபேசியில் அழைத்து விபரங்களை எடுத்து கூறினர். அங்கிருந்த DSP அவர்களிடம் கருணாஸ் அவர்கள் மறுபடியும் பேசினார்கள் DSP அவர்கள் துரிதமாக பணிகள் நடைபெறுவதை எடுத்து கூறினார்கள்.

நான்கு மருத்துவர்களை கொண்டு பிரேத பரிசோதனை பணிகள் நடைபெற்ற பிறகு மதியம் 3மணியளவில் உடல்கள் சொந்த ஊரான கோட்டைப்படினத்திற்கு இஸ்லாமிய அமைப்புகளின் ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பிவைக்கப்பட்டது.

இதில் தமிமுன் அன்சாரி MLA முன் முயற்சியில் கருணாஸ் MLA அவர்களின் முயற்ச்சிகள், கோட்டைப்பட்டினம் ஊர் ஜமாத்தார்கள், தன்னார்வலர்கள் மற்றும் பல அமைப்புகள் முயற்சிகளும் போற்றுதலுக்குரியது.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#இராமநாதபுரம்_மாவட்டம்
25.11.17